பன்னீர்செல்வம் மீண்டும் ஆளுநரை சந்தித்தார்! அடுத்து நடக்கப் போவது என்ன?
தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை முதல்வர் ஓபிஎஸ் இன்று மீண்டும் சந்தித்து சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
ஆளுநர் வித்யாசாகர் ராவை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று மீண்டும் சந்தித்து சட்டசபையில் தமக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
தமிழகத்தில் உச்சகட்ட அரசியல் குழப்பம் நீடிக்கிறது. முதல்வர் ஓபிஎஸ் தலைமையிலான காபந்து அரசாங்கமே நீடித்து வருகிறது.
முதல்வர் ஓபிஎஸ் தாம் கட்டாயப்படுத்தப்பட்டு ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு கோருகிறார், அதிமுகவின் மற்றொரு அணியோ முதலில் சசிகலாவை முதல்வராக முன்னிறுத்தியது.
ஆனால் சசிகலா சிறைக்குப் போக நேரிட்டதால் இப்பொழுது எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக முன்னிறுத்துகிறது. அதிமுகவுக்குள் தொடரும் இந்த குழப்பத்தால் ஆளுநர் எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் இருக்கிறார்.
இந்த நிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி அணியினரை அழைத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தையும் நேரில் அழைத்து ஆளுநர் ஆலோசனை நடத்தினார்.
இச்சந்திப்பின் போது தமக்கு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு தர வேண்டும் என ஆளுநரிடம் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தினார்.
முதல்வர் ஓபிஎஸ்ஸுடன் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், பொன்னையன் உள்ளிட்டோர் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர்.
பன்னீர்செல்வம் மீண்டும் ஆளுநரை சந்தித்தார்! அடுத்து நடக்கப் போவது என்ன?
Reviewed by Author
on
February 15, 2017
Rating:

No comments:
Post a Comment