வடக்கில் மீண்டும் வெடிச்சத்தம் : மஹிந்த
வடக்கு - கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கும் சமஷ்டி மூலம் நாட்டில் பிளவுகளை ஏற்படுத்தவுமே இந்த அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பை உருவாக்க முயற்சித்து வருகின்றது.
இந்த அரசாங்கத்தினால் அரசியல் அமைப்பில் மாற்றங்களை கொண்டுவர அதிகாரம் உள்ளது. ஆனால் புதிய அரசியல் அமைப்பை உருவாக்க இவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாட்டின் தேசிய பாதுகாப்பு நாளுக்கு நாள் மோசமாகி வருகின்றது. வடக்கில் மீண்டும் வெடிச்சத்தம் கேட்க ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மொனராகலையில் மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வடக்கில் மீண்டும் வெடிச்சத்தம் : மஹிந்த
Reviewed by Author
on
February 14, 2017
Rating:

No comments:
Post a Comment