அண்மைய செய்திகள்

recent
-

தெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் மே 26-ந்தேதி ரிலீஸ்


இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான், லிட்டில் மாஸ்டர் என்று அழைக்கப்படுபவர் சச்சின் தெண்டுல்கர். 1989-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக தனது 16 வயதில் அறிமுகமான அவர், 2013-ம் ஆண்டு வரை சுமார் 24 வருடம் இந்திய கிரிக்கெட்டில் அசைக்க முடியாத நபராக இருந்தார். ஒரு நாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்த அவர், ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.

இவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘சச்சின்: ஒரு பில்லியன் கனவு (Sachin: A Billion Dreams)’ என்ற திரைப்படம் உருவாகி வந்தது. இந்த படத்தின் முதல் போஸ்டர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியானது. ஆனால் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் படம் வருகிற மே மாதம் 26-ந்தேதி வெளியாகும் என சச்சின் தெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதவில் ‘‘ஒவ்வொருவரும் என்னிடம் கேட்கும் கேள்விக்கு பதில் இங்கே உள்ளது. உங்களது காலண்டரில் குறித்துக் கொண்டு அதை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். @SachinTheFilm releases 26.05.17’’ என்று தெரிவித்துள்ளார்.

Sachin: A Billion Dreams என்ற பெயர், போட்டி நடத்தி அதன்மூலம் தேர்வு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் மே 26-ந்தேதி ரிலீஸ் Reviewed by Author on February 14, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.