நாடளாவிய ரீதியில் தாதிய உத்தியோத்தர்களின் கவனயீர்ப்பு போராட்டம்.-Photos
இன்று (28.02.2017) நாடு முழுவதும் தாதிய உத்தியோகத்தர்கள் ஒரு மணி நேரம் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் திரு.சமன் ரத்னபிரிய அவர்களின் ஏற்பாட்டில் தாதிய உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கவேண்டிய நியாயமான கோரிக்கைகளை முன்னிறுத்தி இப்பணிப் புறக்கணிப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அக்கோரிக்கைகளாக;
01. அனுமதிக்கப்பட்ட மேலதிக நேரக் கொடுப்பனவை நடைமுறைப்படுத்தவும்.
(2016 இல் இருந்து அரச ஊழியர்களுக்கான அடிப்படைச்சம்பளம் உயர்வு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய மேலதிக நேரக் கொடுப்பனவும் உயர்வடையும். ஆனால் தாதிய உத்தியோகத்தர்களிற்கான கொடுப்பனவு உயர்விற்கு அனுமதி கிடைத்தபோதிலும், இன்னும் நடைமுறைப்படுத்தாத நிலை)
02. இரண்டாம் மொழிச்சித்திக்கு வைத்திய சேவைக்கு இலகுவாகவும் தாதிச் சேவைக்கு சிக்கலாகவும் வடவமக்கப்பட்டுள்ளது. இதனை சீர்படுத்தும்படியும்.
03. சுகாதார சேவையில் தாதிச் சேவையின் நிர்வாக பகுதிக்கு வேறு பிரிவினரை விடுத்து பட்டதாரி தாதியையே நியமிக்க வேண்டும்.
04. முன்பிருந்த பதவியுயர்வு கால எல்லை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனை முன்பிருந்தது போல் 6 வருடங்களங்களாக மாற்றவேண்டும்.
05. தாதிய தொழில் மட்டத்தின் நிலையை சம்பள அடிப்படையில் பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது. அதனை மறுசீரமைப்பு செய்யவேண்டும்.
போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத சந்தர்ப்பத்தில் பணி நிறுத்தமாக தொடரும் என தெரிவித்திருந்தனர்.

Reviewed by NEWMANNAR
on
February 28, 2017
Rating:
No comments:
Post a Comment