கேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து மன்னார் பாடசாலை மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் (Photos)
தமது சொந்த காணிகளை விடுவிக்க கோரி கடந்த 21 தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கேப்பாப்பிலவு மக்களுக்கும்,குறிப்பாக போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள அப்பகுதி மாணவர்களுக்கும் ஆதரவு தெரிவித்து மன்னாரில் உள்ள பாடசாலைகளில் இன்று காலை மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 21 தினங்களாக கேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அவர்களுடைய பிள்ளைகளும் பாடசாலைக்குச் செல்லாது போராட்டத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறன்றனர்.
இந்த நிலையில் குறித்த காணிகளை விடுவிக்க கோரியும்,மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் மன்னாரில் உள்ள பாடசாலைகளில் மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காலை 8 மணி முதல் 9 மணிவரை பாடசாலை மாணவர்கள் தமது பாடசாலைகளுக்கு முன் பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சொந்த குடியிருப்பு இருந்தும் அகதி வாழ்க்கையா? எம்மவர்களின் காணிகளை அரசே விடுவியுங்கள்,என பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..
மன்னார் நிருபர்
20-2-2017
கடந்த 21 தினங்களாக கேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அவர்களுடைய பிள்ளைகளும் பாடசாலைக்குச் செல்லாது போராட்டத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறன்றனர்.
இந்த நிலையில் குறித்த காணிகளை விடுவிக்க கோரியும்,மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் மன்னாரில் உள்ள பாடசாலைகளில் மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காலை 8 மணி முதல் 9 மணிவரை பாடசாலை மாணவர்கள் தமது பாடசாலைகளுக்கு முன் பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சொந்த குடியிருப்பு இருந்தும் அகதி வாழ்க்கையா? எம்மவர்களின் காணிகளை அரசே விடுவியுங்கள்,என பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..
மன்னார் நிருபர்
20-2-2017
கேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து மன்னார் பாடசாலை மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் (Photos)
Reviewed by NEWMANNAR
on
February 20, 2017
Rating:

No comments:
Post a Comment