அண்மைய செய்திகள்

recent
-

உயிரை விட தயார்..முதலமைச்சராக எனக்கு விருப்பமில்லை: சசிகலா பரபரப்பு பேட்டி


தமிழகத்தில் ஆட்சி அமைக்க தனது உயிரையும் விட தயார் என அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

போயஸ் கார்டனில் பேசிய சசிகலா கூறியதாவது, அதிமுகவை பிரித்தாள சதி நடக்கிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த அன்றே அதிமுகவை பிரிக்க நினைத்தார்கள்.

ஜெயலலிதா இறந்த அன்று இரவே ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சராக பதவியேற்கவும், ஏற்கனவே இருந்த அமைச்சரவையையே தொடர வேண்டும் என நான் தான் சொன்னேன்.

ஆனால், நீங்கள் தான் முதலமைச்சராக வேண்டும் என எல்லோரும் என்னை வலியுறுத்தினார்கள். ஜெயலலிதா இறந்த துக்கத்தில் முதலமைச்சராக எனக்கு விருப்பமில்லை.

ஆனால், தற்போது நிலை மாறியுள்ளது. எம்ஜிஆரை நீக்கிய திமுகவிடம் முதலமைச்சர் ஓ.பி.எஸ் சட்டசபையில் சிரித்து பேசியதாக எம்.எல்.ஏ.க்கள் அப்போதே புகார் அளித்தார்கள்.

அதனால், தான் நான் முதல்வராக முடிவுசெய்தேன். நான் நினைத்திருந்தால் ஜெயலலிதா இறந்த அன்றே முதலமைச்சர் ஆகியிருக்கலாம், ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை.

அதிமுக அரசு அமைய உயிரையும் விட தயார். எத்தனை ஆண்கள் எதிர்த்தாலும் ஒரு பெண்ணாக எதிர்த்து நிற்பேன். எத்தனை எதிரிகள் வந்தாலும் சமாளிக்கும் திறன் நம்மிடம் உள்ளது என தொண்டர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

உயிரை விட தயார்..முதலமைச்சராக எனக்கு விருப்பமில்லை: சசிகலா பரபரப்பு பேட்டி Reviewed by Author on February 13, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.