அண்மைய செய்திகள்

recent
-

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: இளவரசி அதிரடி அறிவிப்பு!


சவூதி அரேபியா பெண்கள் இனி தங்கள் எடையை குறைத்துக் கொள்வதற்கு உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று பயிற்சி செய்து கொள்ளலாம் என்று இளவரசி ரீமா பிண்ட் பண்டர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவில் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் மற்றும் கொள்கைகள் உள்ளது. இதைத் தான் அவர்கள் பின்பற்ற வேண்டும். மீறினால் கடுமையான தண்டனை விதிக்கப்படும்.

இந்நிலையில் பெண்களுக்கான கொள்கையில் சிறிய மாற்றம் ஒன்று செய்யப்பட்டுள்ளதாக பெண்கள் விவகார துணைத்தலைவரும், இளவரசியுமான Reema bint Bandar ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், சவூதி அரேபியா பெண்கள் தங்கள் உடல் எடைகளை குறைத்து கொள்வதற்கு உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று கொள்ளலாம் என்றும்,

அங்கு அவர்கள் நீச்சல் செய்து கொள்ளலாம், ஓட்டப் பயிற்சி செய்து கொள்ளலாம் மற்றும் உடற்பயிற்சிகளையும் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அப்பயிற்சியின் போது அங்கு ஆண்கள் யாரும் இருக்க கூடாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கான இந்த கொள்கை மாற்றம் இந்த வாரத்திற்குள் வரும் என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதிய உடற்பயிற்சி நிலையங்கள் திறப்பதற்கான உரிமங்கள் இந்த மாத இறுதியில் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் பெண்கள் ஆரோக்கியமுடன் வாழவேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் மட்டுமே பெண்களுக்கு தடை நீக்கப்பட்டுள்ளதே தவிர வாலிபால், கூடைப்பந்து மற்றும் கால்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு பெண்களுக்கு மீதான தடை அப்படியே உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: இளவரசி அதிரடி அறிவிப்பு! Reviewed by Author on February 14, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.