அண்மைய செய்திகள்

recent
-

முதல் தடவையாக மன்னார் மாவட்டத்திற்கு வெற்றிக்கிண்ணம்….


வடக்கின் வல்லவன் மாபெரும் கிறிக்கெற்சுற்றுப்போட்டி வடமாகாணஅழகுக்கலை சங்கங்களின் சம்மேளனம் கடந்த 12-02-2017 ஞாயிற்றுக்கிழமை  கிளிநொச்சி பொதுவிளையாட்டரங்கில் காலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வினை காலை 09-00மணிக்கு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கொளரவ சிறிதரன் அவர்களும் முல்லைத்தீவு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சாந்தி சிறிஸ்கந்தராஜா அவர்களும் இணைந்து வடக்கின் வல்லவன் கிறிக்கெற்சுற்றுப்போட்டியை ஆரம்பித்து வைத்தனர்.

அணிகள்…....
  • யாழ்ப்பாணம்
  • வவுனியா
  • கிளிநொச்சி
  • முல்லைத்தீவு
  • மன்னார்
05மாவட்டத்தினையும் உள்ளடக்கியதாக 06ஓவர் கொண்ட சுற்றில் ஒரு அணி 03 போட்டிகள் கலந்து கொண்டு தமது திறமையை வெளிப்படுத்தினர்.
இறுதிப்போட்டியில் வவுனியா அணியினை எமது மன்னார்அணி 03 விக்கெட்டுகளால் வெற்றியடைந்து "வடக்கின் வல்லவன்" என்பதை நிலைநாட்டி வெற்றிக்கிண்ணத்தினை தனதாக்கிக்கொண்டது.

முதல் முதலான போட்டியிலே எமது மன்னார் அணி வெற்றிக்கிண்ணத்தினை தூக்கியுள்ளது. வெற்றிக்கிண்ணத்தினை வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவருமான கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்களும் வடமாகாணசபை உறுப்பினர்  கௌரவ ஆனால்ட் அவர்களும் இணைந்து வழங்கி  வைத்தனர். இவர்களுடன் வடக்குமாகாணத்தின் அழகுக்கலை சங்கங்களின் சம்மேளத்தின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

மன்னார் அணியின் வீரர்கள்....
  • கமல்-தலைவர்
  • விமல்
  • ராகேஸ்
  • தினேஸ்
  • றோகித்
  • தீபன்
  • கிளின்டன்
  • றெஜிபன்
  • டக்ளஸ்
  • ஆரோக்கியநாதன்
  • ராஜா

இவர்களில் றோகித் சிறந்த பந்துவீச்சாளராக தெரிவு செய்யப்பட்டார் வெற்றிக்கிண்ணங்களும் கேடையமும் வழங்கப்பட்டது மன்னார் மாவட்டமானது தற்போது பலரின் கிண்டல் கேலி வார்த்தைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து தனது திறமையினை ஒவ்வொரு துறையிலும் நிரூபித்து வருகின்றது பாராட்டுக்குரியது.
வெற்றிக்கிண்ணத்தினை பெற்றுக்கொண்ட மன்னார் அழகுக்கலை அணியினருக்கு எமது நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி நிற்கின்றோம்.

தொகுப்பு-வை,கஜேந்திரன்-

 










முதல் தடவையாக மன்னார் மாவட்டத்திற்கு வெற்றிக்கிண்ணம்…. Reviewed by Author on February 14, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.