வவுனியாவில் 31ஆவது நாளாக மேற்கொள்ளபடும் போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர்கள் சங்கம் ஆதரவு
வவுனியாவில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
வவுனியா ஏ9 வீதியில் வீதியில் வவுனியா அஞ்சல் திணைக்களத்திற்கு அருகாமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றுடன் (26-03) 31 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் பெருமளவானோர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றர்.
இந் நிலையில் இன்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தலைமையில் கொழும்பிலிருந்து நேரடியாக போராட்டம் இடம் பெறுமு; இடத்திற்கு வருகை தந்திருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ஆதரவு தெரிவித்ததுடன் அவர்களின் கவலைகளையும் பிரச்சனைகளையும் கேட்டறிந்து கொண்டதுடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனை உடனடியாக தீர்க்கப்படவேண்டும் அத்துடன் இலங்கை அரசாங்கம் கால அவகாசம் கேட்டு அவர்களுடைய பிரச்சனையை தீர்க்காமல் காலம் கடத்த முடியாது என தெரிவித்தனர்

Reviewed by NEWMANNAR
on
March 26, 2017
Rating:

No comments:
Post a Comment