4000 ஏக்கர் காணி யாழில் விடுவிக்கப்படும் மேஜர் ஜெனரல் மகேஸ் தகவல்....
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதியாக இருந்து இராணுவத்தின் பிரதான அலுவலராக பதவி உயர்வு பெற்றுச் செல்கின்ற மேஐர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்கவின் பிரியாவிடை நிகழ்வு நேற்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேஐர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தேசிய பாதுகாப்பு படையினர் யாழ் மாவட்ட மக்களுக்கு ஒரு நம்பகரமான செயற்றிட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இதன் மூலம் மக்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் காணிகளை நாங்கள் வழங்கியுள்ளோம்.
மேலும் நாம் காணிகளை விடுவிக்கவுள்ளோம். இதற்காக எதிர்வரும் ஏப்ரல் மாதம் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுவிப்பு திட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தின் காங்கேசன்துறை முகப் பகுதியின் சில இடங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மகேஷ் சேனநாயக்க தெரிவித்தார்.
மேற்படி நிகழ்வில், எதிர்வரும் வருடங்களில் மீள்குடியேற்ற வேண்டிய இடங்களை அடையாளம் காணுதல், அதற்கான முன்மொழிவுகளை ஏற்படுத்திக்கொள்ளல்.
மேலும் அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள இடங்களில் மக்களின் தேவைப்பாடுகள், இராணுவத்தினரின் பயன் பாட்டில் உள்ள மக்களின் காணிகளை மக்களுக்கு பெற்றுக்கொடுத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பின் மூலமாக யாழ்.மாவட்ட மக்களின் சமகால செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் யாழ்.மாவட்ட செயலக வட்டாரங்கள் தகவல் தெரிவித்திருந்தன.
4000 ஏக்கர் காணி யாழில் விடுவிக்கப்படும் மேஜர் ஜெனரல் மகேஸ் தகவல்....
Reviewed by Author
on
March 29, 2017
Rating:

No comments:
Post a Comment