அண்மைய செய்திகள்

recent
-

சுவிஸில் 9000 குழந்தைகள் காயம்.....


சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பொது விளையாட்டு மைதானங்களில் ஏற்படும் விபத்தில் ஆண்டிற்கு 9000 குழந்தைகள் காயமடைவதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து விபத்துகளை தவிர்க்க மைதான வசதிகளை வருடாந்திரம் சரிபார்க்க Bureau of Accident Prevention (BPA) பரிந்துரைத்துள்ளது.

முடிந்தவரை BPA-ன் 1200 பாதுகாப்பு உறுப்பினர்கள் மைதானங்களில் உள்ள வசதிகளை சரிபார்க்க பரிந்துரைக்கப்படுவார்கள்.

இதன்மூலம் குழந்தைகள் ஆபத்துகளை எதிர்கொள்ள கற்றுக்கொள்வர்கள்.

பெரும்பாலான குழந்தைகள் பத்து வயதிற்கு முன்பாகவே சூதாட்டத்தில் கவனம் செலுத்துகின்றனர், இதன்பின்னரே அதிலுள்ள ஆபத்துகளை தெரிந்து கொள்கின்றனர்.

இதனை முழுமையாக புறக்கணிக்க முடியாவிட்டாலும் குறைக்கலாம், இதுபோன்ற அபாயத்தன்மையான விளையாட்டுகள் குறித்து BPA கற்றுக்கொடுக்கும்.

மைதானங்களில் சிறய காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், தீவிர காயங்கள் ஏற்பட சாத்தியமானதல்ல என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதை தவிர்க்க மைதானங்களில் ஆண்டு தோறும் அதிகாரிகளால் பெரியளவில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.

சுவிஸில் 9000 குழந்தைகள் காயம்..... Reviewed by Author on March 29, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.