தீவிரவாதிக்கு கனடா குடியுரிமை வழங்கிய ஜஸ்டின் டுரூடோ அரசு...
ஆயுள்தண்டனை பெற்ற தீவிராவாதிக்கு கனடா அரசு அந்நாட்டின் குடியுரிமையை வழங்க தீர்மானித்திருப்பது சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது.
அரேபிய நாடான ஜோர்டனில் பிறந்தவர் Zakaria Amara. பின்னர் சவுதி அரேபியாவுக்கு சென்ற அவர் தனது டீன் ஏஜ் பருவத்தில் கனடாவுக்கு வந்து செட்டில் ஆனார்.
பின்னர் இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த Zakaria பல நாசவேலைகளில் ஈடுப்பட்டுள்ளார்.
கனடா மக்களின் பாதுகாப்பை சீர்குலைத்து நாசம் செய்வதையே குறிக்கோளாக கொண்டு அவர் செயல்பட்டுள்ளார்.
இந்நிலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட தீவிரவாதி Zakariaவுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது.
இதனால் Zakariaன் கனடா குடியுரிமை அவரிடம் இருந்து முந்தைய கனடா அரசால் பறிக்கப்பட்டது.
பின்னர் ஆட்சிக்கு வந்த ஜஸ்டின் டுரூடோ தலைமையிலான அரசு தீவிரவாதி Zakariaக்கு திரும்பவும் கனடா குடியுரிமை வழங்க சில நாட்களுக்கு முன்னர் சட்டம் இயற்றியுள்ளது.
விரைவில் அவருக்கு குடியுரிமை வழங்கப்படும் என தெரிகிறது.
மேலும், Zakariaவுக்கு இது நாள் வரை சிறையிலிருந்து வெளியில் வர பரோல் மறுக்கப்பட்டது.
ஆனால் சிறை சட்டம் மாறியுள்ளதால் அவர் விரைவில் சிறையிலிருந்து விடுதலையாகி சுதந்திரமாக உலா வருவார் என தெரிகிறது.
இந்த விடயத்தை மேற்கொண்ட கனடா பிரதமரை பல பத்திரிக்கைகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.
தீவிரவாதிக்கு கனடா குடியுரிமை வழங்கிய ஜஸ்டின் டுரூடோ அரசு...
Reviewed by Author
on
March 04, 2017
Rating:

No comments:
Post a Comment