ஏர் இந்தியா விமானம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வாய்ப்பு: ஏன் தெரியுமா?
சர்வதேச அளவில் புதிய சாதனையை படைத்துள்ள ஏர் இந்தியா விமான நிறுவனம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகளவில் முதன் முதலாக ஏர் இந்தியா விமானத்தில் முழுவதும் பெண் ஊழியர்கள் மட்டுமே செயல்படும் வகையில் புதிய விமானப் பயண சேவை வெற்றிகரமாக தொடங்கப்பட்டுள்ளது.
அதாவது, விமானிகள், விமானத்தில் பணிபுரியும் ஊழியர்கள் என அனைவரும் பெண் ஊழியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இதுமட்டுமில்லாமல், இந்த விமானத்திற்கு வரும் பயணிகளை அனுமதிப்பது, சோதனை செய்வது, வான்வழி போக்குவரத்தை கட்டுப்படுத்துவது, விமானப் பாகங்களை பரிசோதனை செய்வது என அனைவரும் பெண் ஊழியர்கள் மட்டுமே.
TWITTER - SAN FRANCISCO AIRPORT
சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இச்சேவை கடந்த திங்கள் அன்று தொடங்கியுள்ளது.
இந்தியாவின் தலைநகரான டில்லியில் இருந்து புறப்பட்ட விமானம் பசிபிக் கடல் வழியாக அமெரிக்காவில் உள்ள சான் பிரான்ஸ்சிஸ்கோ நகரை அடைந்துள்ளது.
பின்னர், அட்லாண்டிக் கடல் வழியாக திரும்பிய அந்த விமானம் நேற்று டில்லியை வந்தடைந்துள்ளது.
இதன் மூலம், உலகத்தையே ஒருமுறை சுற்றி ஏர் இந்தியா விமானம் பயணம் செய்துள்ளது.
இச்சாதனையை இதுவரை எந்த விமான நிறுவனமும் நிகழ்த்தவில்லை என்பதால், கின்னஸ் புத்தகத்திற்கு இது குறித்து தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், மார்ச் 8-ம் திகதி சர்வதேச மகளிர் தினம் என்பதால், ஒவ்வொரு ஆண்டும் இந்த திகதியில் பெண் ஊழியர்கள் மட்டும் இடம்பெறும் வகையில் விமானங்களை இயக்க உள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியா விமானம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வாய்ப்பு: ஏன் தெரியுமா?
Reviewed by Author
on
March 04, 2017
Rating:

No comments:
Post a Comment