டெங்கு ஒழிப்புவாரம்....மாபெரும் சிரமதானம் தொடர்பான அறிக்கை.....
13.03.2017 காலை 7.00 மணியளவில் நகரசபை முன்றலில் கூடிய அலுவலர்கள் சிரமதானப் பணிக்கான ஆயத்தவேலைகளை மேற்கொண்டு 7.30 மணியளவில் பள்ளிமுனை நோக்கிப் புறப்பட்டனர்.
உழவு இயந்திரங்கள்
JCB, கலி பவுசர் போன்றவற்றுடன் 30 சுகாதாரத் தொழிலாளர்கள் மற்றும் நகரசபை உத்தியோகத்தர்கள் ஆகியோர் இச்சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.இவர்களுடன் இணைந்து பொலிஸ் மற்றும் பொதுச்சுகாதாரப் பரிசோதகர் ஆகியோரும் ஒத்துழைப்பு வழங்கினர். குறிப்பிட்டளவு கிராம மக்களும் இதில் பங்கெடுத்தனர்.
இரண்டாம் நாளாக 14.03.2017 அன்று உப்புக்குளம் வடக்கு. உப்புக்குளம் தெற்கு மற்றும் மூர்வீதி ஆகிய இடங்களில் சிரமதானப்பணிகள் நடைபெற்றன.
சிரமதானப்பணியின்போது
• பற்றைகள்-குப்பைகள் போத்தல்கள்-பிளாஸ்ரிக் பொருட்கள்-பொலித்தீன் பைகள்என்பன அகற்றப்பட்டன.
• வடிகால்கள் துப்பரவு செய்யப்பட்டது
• பயன்படுத்தமுடியாத இரு பொதுக்கிணறுகள் அகற்றப்பட்டன.
• பராமரிப்பில் இல்லாத காணிகளை உரிமையாளர்களால் துப்பரவு செய்வதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
• தெருவிளக்குகள் பொருத்தும் பணிகள் இடம்பெற்றன.
• பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களால் டெங்கு நுளம்புகள் உள்ள இடங்கள் அடையாளங்காணுதலும் அவற்றினை அகற்றுதலம் செயற்பாடுகள் நடைபெற்றது.
• பொலிசார் சிரமதானப்பணியின்போது பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று டெங்குநுளம்பு பரவக்கூடிய இடங்களை அகற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினர்.
இவ்விரு இடங்களிலும் ஒருசில மக்கள் மட்டுமே சிரமதானப்பணியல் பங்ககொண்டனர்.
எனவே தொடர்ந்து நடக்கவிருக்கும் கீழ்வரும் சிரமதானப்பணிகளில் பொதுமக்களும் இணைந்து சிரமதானப்பணியில் ஈடுபடுமாறு நகரசபை அன்புடன்கேட்டுக்கொள்கின்றது.
தொடர்ந்துசிரமதானப் பணிகள் நடைபெறும இடங்களுக்கானகாலஅட்டவணை
திகதி பிரதேசங்கள்
15.03.2017 (புதன்) பெற்றா-சின்னக்கடை-சாவற்கட்டு
16.03.2017 (வியாழன்) கடலேரிவீதி-பெரியகடை-பனங்கட்டு கொட்டுகிழக்கு
பனங்கட்டுகொட்டுமேற்கு
17.03.2017 (வெள்ளி) எமில்நகர்-சாந்திபுரம்ääசவுத்பார்
18.03.2017 (சனி ) பெரியகமம்-எழுத்தூர்-பட்டித்தோட்டம்
19.03.2017 (ஞாயிறு) கீரி
டெங்கு ஒழிப்புவாரம்....மாபெரும் சிரமதானம் தொடர்பான அறிக்கை.....
Reviewed by Author
on
March 15, 2017
Rating:

No comments:
Post a Comment