புற்றுநோயுடன் போராடும் பிரபல பிரித்தானிய பாடகரின் மகள்!
பிரபல பிரித்தானிய பாடகரான கென்னி தாமசின் 4 வயது மகள் புற்றுநோயுடன் போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் 1990 களில் மிகவும் பிரபலமான பாடகராக வலம் வந்தவர் கென்னி தாமஸ். இவரது 4 வயது மகள் கிறிஸ்டீனா தற்போது புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு மிகவும் இக்கட்டான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறுமி கிறிஸ்டீனாவின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதை அடுத்து கவலையடைந்த பாடகர் கென்னி நரம்பியல் மருத்துவர் ஒருவரை அணுகி சிறுமியின் உடல்நிலை குறித்து ஆலோசித்துள்ளார்.
மருத்துவரின் பரிசோதனைகளுக்கு பின்னர் சிறுமியின் மூளையில் புற்றுநோய் பாதித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்துள்ள சிகிச்சைகள் சிறுமியின் ஆயுளை சில நாட்கள் நீட்டிக்கலாம் ஆனால் உயிரை காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் கைவிரித்துள்ளனர்.
இதனைடையே பாடகர் கென்னியின் நண்பர்கள் இணைந்து சிறுமி கிறிஸ்டீனாவின் மருத்துவ செலவினங்களுக்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 40,000 பவுண்டு வரை சேகரித்துள்ளதாகவும், கூடிய விரைவில் இந்த தொகை 80,000 பவுண்டுகள் தாண்டும் என நம்புவதாக பாடகரின் நண்பர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
புற்றுநோயுடன் போராடும் பிரபல பிரித்தானிய பாடகரின் மகள்!
Reviewed by Author
on
March 15, 2017
Rating:

No comments:
Post a Comment