இந்தியாவின் வெற்றி உறுதி....சுருண்டது அவுஸ்திரேலியா!
தர்மசாலாவில் நடைபெற்று வரும் இந்தியா-அவுஸ்திரேலிய இடையேயான கடைசி மற்றும் 4வது டெஸ்டில் இந்திய அணி வெற்றியை நோக்கி விளையாடி வருகிறது.
இரு அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி கடந்த 25ம் திகதி தர்மசாலாவில் தொடங்கியது. காயம் காரணமாக விராட் கோஹ்லி விலகியதை அடுத்து ராஹனே இந்திய அணித்தலைவராக செயல்பட்டு வருகிறார்.
முதல் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 300 ஓட்டங்கள் எடுத்தது. இதை தொடரந்து முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி 332 ஓட்டங்கள் எடுத்தது.
இந்நிலையில், 32 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த அவுஸ்திரேலிய அணி 137 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அதிகபட்சமாக அவுஸ்திரேலிய தரப்பில் மேக்ஸ்வெல் 45 ஓட்டங்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் யாதவ், அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
106 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது.
மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழக்காமல் 19 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ராகுல் 13 ஓட்டங்களுடனும், முரளி விஜய் 6 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
இன்னும் இரண்டு நாட்கள் மீதமுள்ள நிலையில் இந்திய அணியின் வெற்றிக்கு 87 ஓட்டங்கள் தேவைப்படுகிறது. இந்த போட்டியில் வெற்றிப்பெறுவதன் மூலம் இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் வெற்றி உறுதி....சுருண்டது அவுஸ்திரேலியா!
Reviewed by Author
on
March 28, 2017
Rating:

No comments:
Post a Comment