இலங்கை அரச போக்குவரத்து சபையின் மன்னார் சாலைக்கு 20 வருடங்களின் பின்னர் தமிழர் ஒருவர் முகாமையாளராக நியமனம்
இலங்கை அரச போக்குவரத்து சபையின் மன்னார் சாலைக்கு புதிய முகாமையாளராக கடந்த 20 வருடங்களின் பின்னர் தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மன்னார் வங்காலை கிராமத்தைச் சேர்ந்த ஏ.ஜே.லெம்பேட் என்பவரே இலங்கை அரச போக்குவரத்து சபையின் மன்னார் சாலைக்கு புதிய முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய முகாமையாளராக நியமிக்கப்பட்ட ஏ.ஜே.லெம்பேட் மன்னார்-தாழ்வுபாடு பிரதான வீதியில் உள்ள இலங்கை அரச போக்குவரத்து சபையின் மன்னார் சாலை அலுவலகத்தில் இன்று (15) புதன் கிழமை காலை 8 மணியளவில் ஒப்பமிட்டு தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

20 வருடங்களின் பின்னர் இலங்கை அரச போக்குவரத்து சபையின் மன்னார் சாலைக்கு புதிய முகாமையாளராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை அரச போக்குவரத்து சபையின் மன்னார் சாலை பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் அவரை வைபவ ரீதியாக வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.(படம்)
-மன்னார் நிருபர்-
(15-03-2017)
மன்னார் வங்காலை கிராமத்தைச் சேர்ந்த ஏ.ஜே.லெம்பேட் என்பவரே இலங்கை அரச போக்குவரத்து சபையின் மன்னார் சாலைக்கு புதிய முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய முகாமையாளராக நியமிக்கப்பட்ட ஏ.ஜே.லெம்பேட் மன்னார்-தாழ்வுபாடு பிரதான வீதியில் உள்ள இலங்கை அரச போக்குவரத்து சபையின் மன்னார் சாலை அலுவலகத்தில் இன்று (15) புதன் கிழமை காலை 8 மணியளவில் ஒப்பமிட்டு தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

20 வருடங்களின் பின்னர் இலங்கை அரச போக்குவரத்து சபையின் மன்னார் சாலைக்கு புதிய முகாமையாளராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை அரச போக்குவரத்து சபையின் மன்னார் சாலை பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் அவரை வைபவ ரீதியாக வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.(படம்)
-மன்னார் நிருபர்-
(15-03-2017)
இலங்கை அரச போக்குவரத்து சபையின் மன்னார் சாலைக்கு 20 வருடங்களின் பின்னர் தமிழர் ஒருவர் முகாமையாளராக நியமனம்
Reviewed by NEWMANNAR
on
March 15, 2017
Rating:

No comments:
Post a Comment