பன்றிக்காச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் இளம் தாய் ஒருவர் மரணம்
வவுனியா பொது வைத்தியசாலையில் பன்றிக்காச்சல் காரணமாக கடந்த 22 ஆம் திகதி முதல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இளம் தாய் ஒருவர் மரணமடைந்துள்ளதாக வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது, கடந்த 22ஆம் திகதி இனங்காணப்பட்ட 25 வயதுடைய ஹெப்பிட்டிக்கொலவ பகுதியைச் பெண்ணொருவர் தொடர்ந்தும் அதி தீவிர சிகிச்சைப்பிரில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இவருக்கு குழந்தை கிடைத்து ஒரு கிழமை கடந்த நிலையில் பன்றிக்காய்ச்சல் தொற்றுக்கு முகங்கொடுந்திருந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி (02.03) அவர் மரணமடைந்துள்ளார். அத்துடன், 37 வயதுடைய பூவரசம்குளம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இது தவிர மேலும் ஐவர் பன்றிக் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், பன்றிக்காச்சல் ஏற்பட்டவர்களை பார்வையிடுவதற்கு கர்ப்பிணி தாய்மார், சிறுவர்களை வைத்தியசாலைக்கு அழைத்து வரவேண்டாம் எனவும் வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
பன்றிக்காச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் இளம் தாய் ஒருவர் மரணம்
Reviewed by NEWMANNAR
on
March 03, 2017
Rating:

No comments:
Post a Comment