செட்டிக்குளத்தில் 9மில்லியன் செலவில் சித்த வைத்தியசாலை திறந்துவைப்பு-Photos
வவுனியா செட்டிக்குளத்தில் சித்த வைத்தியசாலை கட்டிடத்தொகுதி புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் (02 03 2017) காலை உத்தியோக பூர்வமாக திறந்து வைத்தார். சுகாதார சேவையினை வலுப்படுத்தும் நோக்கத்தினை அடிப்படையாக கொண்டு 2016ம் ஆண்டு மாகாண குறித்தொகுக்கப்பட்ட அபிவிருத்தி கொடை நிதியில் இருந்து 9 மில்லியன் ரூபாய் செலவில் கிராமிய சித்த மருத்துவமனை அமைக்கபட்டு திறந்து வைக்கப்பட்டதுடன் மரக்கன்று நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான , செந்தில் நாதன் மயூரன், ஜெயதிலகா, சுதேச மருத்துவ திணைகளத்தின் வடமாகாண ஆணையாளர் திருமதி.துரைரட்ணம். வைத்தியர் மகேந்திரன், சுகாதார அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ப.சத்தியசீலன், வைத்தியர்கள், நலம்விரும்பிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
செட்டிக்குளத்தில் 9மில்லியன் செலவில் சித்த வைத்தியசாலை திறந்துவைப்பு-Photos
Reviewed by NEWMANNAR
on
March 03, 2017
Rating:

No comments:
Post a Comment