யுத்த குற்றம் தொடர்பிலான விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகளை இணைக்க அரசியலமைப்பில் இடமில்லை!
இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகளின் ஒத்துழைப்பைப் பெற அரசியலமைப்பின் பிரகாரம் எந்த அனுமதியும் இல்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி யூ.ஆர்.டி. சில்வா தெரிவித்தார்.
' சட்டம்' எனும் சிங்கள மொழி மூலமான தேசிய சட்ட மாநாடு தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவரான சிரேஷ்ட சட்டத்தரணி யூ.ஆர்.டி. சில்வா இதனை அறிவித்தார்.
யுத்த குற்றம் தொடர்பிலான விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகளை இணைக்க அரசியலமைப்பில் இடமில்லை!
Reviewed by Author
on
March 30, 2017
Rating:

No comments:
Post a Comment