முல்லைத்தீவில் தொடரும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்
முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் இன்று 17 ஆவது நாளாகவும் தொடர்ந்துள்ளது.
குறித்த போராட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பொதுமக்களின் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு முன்பு தினமும் இலங்கையின் தேசியக்கொடி ஏற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகிறதுடன் அங்கு தேசியகீதத்திற்கு பதிலாக காணாமல் போனோரின் உறவினர்களின் புலம்பல் சந்தங்களே கேட்கின்றது.
மேலும் இலங்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற இனநெருக்கடி மற்றும் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காமல் நிலையான சமாதானத்தை எட்ட முடியாது என ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் செயிட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவில் தொடரும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்
Reviewed by NEWMANNAR
on
March 24, 2017
Rating:

No comments:
Post a Comment