ஆபத்தான வெடிபொருட்களுடன் பிலக்குடியிருப்பு மக்கள் வாழ்வு
அண்மையில் ஒருமாத கால தொடர் போராட்டத்தின் மூலம் தமது சொந்தக்காணிகளுக்குள் குடியமரச் சென்ற முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் தற்போது அவர்களது காணியில் ஆபத்தான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
மேற்படி விடுவிக்கப்பட்ட காணிகளில் மற்றும் கிணறுகளில் வெடிக்காத வெடிபொருட்கள் காணப்படுவதாகவும் இதனால் தமது காணிகளை சுத்தப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொள்வதில் தமக்கு பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அண்மையில் கூட ஒருகாணி யில் துப்புரவு செய்து தீ வைக்கும்போது வெடி பொருள் ஒன்று வெடித்ததாகவும் என்றும் அதனால் தெய்வாதீனமாக எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தகவல் தெரிவித்தனர்.
தற்போதும் அநேகமானவர்களின் காணிகள் பற்றைகள் சூழ்ந்து காணப்படுவதால் அதனை சுத்தம் செய்வதில் வெடிபொருட்களால் இடைஞ்சல் ஏற்பட்டுள்ளது. எனவே விரைவில் உரியவர்கள் அனைவரும் காணிகளில் வெடிபொருட்கள் அபாயம் ஏற்படாத வகையில் சுத்தம் செய்து தரவேண்டும் என்று கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆபத்தான வெடிபொருட்களுடன் பிலக்குடியிருப்பு மக்கள் வாழ்வு
Reviewed by NEWMANNAR
on
March 24, 2017
Rating:

No comments:
Post a Comment