பிலவுக்குடியிருப்பு மக்களின் செய்தியை எங்கு போய்ச் சேர வேண்டுமோ அங்கு கொண்டு சென்ற ஊடகவியலாளர்களே வெற்றிக்கு உரிமை கோர தகைமை கொண்டுள்ளனர்-செ.மயூரன்.
பிலவுக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் காணி விடுவிப்புக்கான போராட்ட வெற்றிக்கு ஊடகவியலாளர்களும், ஊடகங்களுமே உரிமை கோர தகைமை கொண்டுள்ளனர் என வடமாகாண சபை உறுப்பினர் செல்தில்நாதன் மயூரன் தெரிவித்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பில் அவர் இன்று(3) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,,
பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் காணி விடுவிப்புக்கான போராட்டம் வெற்றியின் விழிம்பு வரை வந்திருப்பதற்கு தனிப்பட்ட ரீதியில் யாரும் உரிமை கோர முடியாது.
இறுதி வரை தம் சொந்த காணிகளுக்குள் கால் வைத்த பின்பே போராட்டத்திலிருந்து பின் வாங்குவோம் என்ற உறுதியான நிலைப்பாடே அவர்களுக்கு வெற்றியைத் தேடித்தந்துள்ளது.
உலகையே உன்னித்து பார்க்கச்செய்த, உதிரத்தோடு உறைந்து போன அவர்களின் விடுதலை வேட்கையே வெற்றிக்கு வித்திட்டது.
உடல்களிலும்,உள்ளங்களிலும் சுமந்தவலிகளின் வீரியமும் வீச்சுமே அவர்களுக்கு போராட்ட வலிமையை கொடுத்து வேள்வித் தீயில் வெற்றியை தந்தது.
ஒற்றுமையுணர்வுடன் கூடிய இம் மக்களின் அர்ப்பணிப்பான ஒட்டு மொத்த தியாகம் அகிம்சை வழியில் போரிட்ட தந்தை செல்வாவையும், தியாகி திலீபனையும் அவர்கள் மனக்கண் முன்னே நிறுத்தி பாதையமைத்துக்கொண்டது, வெற்றியும் கண்டார்கள்.
இவர்களுக்கு பக்கபலமாக உள்நாட்டு,சர்வதேசஅச்சு,இலத்திரனியல் ஊடகங்களின்,சமூகவலைத்தளங்களின் பங்களிப்பு மண்மீட்புப் போராட்டத்தின் அனைத்து மட்ட பரிமாணங்களையும் உரியவர்களின் கண்களுக்கும், காதுகளுக்கும் கொண்டு செல்ல பேருதவியாக அமைந்தது.
இந்த மக்களின் செய்தி எங்கு போய்ச் சேர வேண்டுமோ அங்கு கொண்டு சென்ற ஊடகவியலாளர்களும்,ஊடகங்களும் வெற்றிக்கு உரிமை கோர தகைமை கொண்டுள்ளனர்.
அரசியல் ரீதியாக இவ்விடயம் முடிவுக்கு கொண்டுவர ஆரோக்கியமான பேச்சுக்களை அரச தலைவர்களுடன் விவேகமான முறையில் நடாத்தி கோரிக்கைகள் நிறைவேற,தம் தலையாய கடமை என உணர்ந்து செயற்பட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர்களுக்கு பிலக்குடியிருப்பு,புதுக்குடியிருப்பு மக்கள் நன்றியுடையவர்களாக இருப்பார்கள்.
இம் மக்களின் அடுத்தடுத்த நகர்வுகள் ஒவ்வொன்றும் அம் மக்களால் சட்ட ரீதியாக, ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களால் முன்னெடுக்கப்பட வேண்டியது அவர்களின் கடமையுமாகும்.
மண் மீட்புக்கான இம் மக்களின் போராட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள்,சமூகஅமைப்புக்கள்,அரச,அரசசார்பற்ற அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், இன,மத,பிரதேச வேறுபாடுகள் கடந்து உணர்வு பூர்வமான ஆதரவும்,ஒத்துழைப்பும் வழங்கியமை இம் மக்களை மகிழ்ச்சிப்படுத்திய விடுதலைக்கு உரமாக அமைந்தமைi யசுட்டிக்காட்ட வேண்டும்.என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிலவுக்குடியிருப்பு மக்களின் செய்தியை எங்கு போய்ச் சேர வேண்டுமோ அங்கு கொண்டு சென்ற ஊடகவியலாளர்களே வெற்றிக்கு உரிமை கோர தகைமை கொண்டுள்ளனர்-செ.மயூரன்.
Reviewed by NEWMANNAR
on
March 03, 2017
Rating:

No comments:
Post a Comment