மன்னார் உப்புக்குளம் தெற்கில் உள்ள மக்களின் குடியிறுப்பு காணிகளை தொல்பொருள் திணைக்களத்திடம் இருந்து மீட்டுத்தருமாறு கோரிக்கை.(படம்)
மன்னார் உப்புக்களம் தெற்கு கிராம அலுவலகர் பிரிவுக்குற்பட்ட மக்களின் குடியிறுப்பு காணிகளை மீட்டுத்தருமாறு கோரி தேசிய நீர் வழங்கள் நகர அபிவிருத்த அமைச்சர் றவூப் ஹக்கீமிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அவரிடம் கொழும்பில் வைத்து நேரடியாக மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
மன்னார் உப்புக்குளம் சன சமூக நிலையத்தின் தலைவர் என்.எம்.ஆலம் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாபா பாரூக் ஆகியோர் நேற்று முந்தினம் நேரடியாக சென்று அவரிடம் குறித்த மகஜரை கையளித்தள்ளனர்.
குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடுகையில்,,,,
உப்புக்குளம் தெற்கு கிராம சேவையாளர் பிரிவுக்குற்பட்ட கோந்தைப்பிட்டி அரச காணி 1980க்கு முன்னர் சுமார் 60 குடும்பங்கள் வசித்து வந்தன.
1983 தொடக்கம் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தம் காரணமாக பல தடவைகள் உள்ளூர் இடம் பெயர்வை சந்தித்த இம்மக்கள் 1990ல் விடுதலை புலிகளால் முற்றாக வெளியேற்றப்பட்டனர்.
இப்பகுதியில் வசித்த மக்கள் மிகவும் வறுமையானவர்கள், இவர்களில் ஒரு சில கல் வீடுகள் தவிர மிகுதி அனைத்தும் ஓலைவீடுகளாகும்.
இவர்களின் இடம் பெயர்வுக்குப் பின் உயர் பாதுகாப்பு பிரதேசமாக இப்பகுதி அறிவிக்கப்பட்டு இம்மக்கள் உள் நுளைய பாதுகாப்பு தரப்பினர் அனுமதிக்கவில்லை.
1995ஆம் ஆண்டு தொடக்கம் உப்பக்குளம் மக்கள் மீள் குடியேற்றத்திற்காக வந்த போதும் இக்காணிகளில் குடியமர அரசு அனுமதி வழங்கவில்லை.
அரச காணியும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் 2009இல் யுத்தம் நிறைவடைந்தது.
இப்பிரதேசம் மக்கள் குடியிருப்புக்காக காணிகள் பிரதேச செயலாளரால் 2005ஆம் ஆண்டு காணிக்கச்சேரி மூலம் வழங்கப்பட்டிருந்தது.
வழங்கப்பட்ட காணிகளில் மன்னாhர் கோட்டை பின்புறமாக அமைந்துள்ள இக்காணிகள் அனைத்தும் பிரதேச செயலாளரினால் நில அளவை செய்யப்பட்டு காணிகளுக்கு அனுமதிப்பத்திரம் 2012ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது.
இதில் கோட்டைக்கு அருகாமையில் 11 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட காணிகளில் ஒரு பள்ளி வாசலும் இந்திய வீட்டுத்திட்டம் ஏனைய திட்டங்கள் ஊடாக 03 வீடுகளும் சொந்த செலவில் கட்டப்பட்ட வீடுகள் என சுமார் 04 வீடுகள் உள்ளது.
மேலும்; 02 தற்காலிக வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இருந்தும் தற்போது இக் காணிகள் தொல்பொருள் திணைக்களத்திற்கு உரிய இடம் என கூறப்பட்டு இக்காணிகளில் எந்த அபிவிருத்திகளும் மேற்கொள்ள வேண்டாம் என இம்மக்களை பொலிஸார் மிரட்டி வருகின்றனர்.
இதனால் இப்பகுதியில் கட்டப்பட இருந்த வீட்டுத்திட்ட வீடுகள் தடுக்கப்பட்டு இம்மக்கள் நிர்க்கதியான நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான முறைப்பாடு 17.06.2013ம் ஆண்டு மன்னார் பிரதேச செயலாளருக்கு வழங்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இப்பகுதியில் வசிப்பவர்கள் மிகவும் வறுமைப்பட்டவர்கள் எனவே இப்பிரச்சினையை உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வை பெற்றுத்தருமாறு தங்களை தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.என குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னார் உப்புக்குளம் தெற்கில் உள்ள மக்களின் குடியிறுப்பு காணிகளை தொல்பொருள் திணைக்களத்திடம் இருந்து மீட்டுத்தருமாறு கோரிக்கை.(படம்)
Reviewed by NEWMANNAR
on
March 03, 2017
Rating:

No comments:
Post a Comment