கேப்பாபுலவு காணி விடுவிப்பு ஏமாற்றம்! தொடர்கிறது போராட்டம்!
கேப்பாபுலவு கிராமசேவையாளர் பிரிவின் மைய கிராமமான கேப்பாபுலவு மக்கள் மீண்டும் தமது போராட்டத்தை இன்று முதல் ஆரம்பித்துள்ளனர். கேப்பாபலவு கிராம சேவையாளர் பிரிவு சூரியாமோட்டை, சூரியபுரம், கேப்பாபுலவு மற்றும் பிலவுக்குடியிருப்பு என நான்கு கிராமங்களை கொண்டதாகும்.
இப்பிரதேசங்களில் முன்னதாக சூரியபுரம், சூரியாமோட்டை என்பவை விடுவிக்கப்பட்டிருந்தது. தற்போதைய போராட்டத்தை தொடர்ந்து பிலவுக்குடியிருப்பின் பெரும்பகுதி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்படாதுள்ள கேப்பாபுலவு பிரதேசத்தில் 128 குடும்பங்களுக்கு சொந்தமான, காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியே தொடர்போராட்டத்தைக் கேப்பாபுலவு மக்கள் இன்று ஆரம்பித்துள்ளனர். இன்று காலை 11.30 மணியளவில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதனிடையே கேப்பாபுலவு பிலவுகுடியிருப்பில் விடுவிக்கப்படுவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படாத நிலையில் மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
பிலவுக்குடியிருப்பு காணிகள் இன்றையதினம் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், 84 குடும்பங்களில் 17 குடும்பங்களிற்கு சொந்தமான காணிகள் விடுவிக்கப்படவில்லை 7 குடும்பங்களுக்கு சொந்தமான அரைவாசி காணிகள் இராணுவத்தின் எல்லைக்குள் உள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அனைத்து காணிகளும் விடுவிக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

Reviewed by NEWMANNAR
on
March 01, 2017
Rating:

No comments:
Post a Comment