மடு வலயக்கல்விப்பணிமனைக்குற்பட்ட மன்-கருங்கண்டல் பாடசாலையில் அமைக்கப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடம் திறந்து வைப்பு-(படம்)
-மடு வலயக்கல்விப்பணிமனைக்குற்பட்ட கருங்கண்டல் றோமன் கத்தோழிக்க தமிழ் கலவன் பாடசாலையில் வடமாகாண சபை நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடத்தொகுதியினை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று புதன் கிழமை காலை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
-பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் ஜோசப் அகஸ்ரீன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் ஆகியோர் குறித்த வகுப்பறைக்கட்டிடத்தொகுதியினை திறந்து வைத்தனர்.
-இதன் போது மடு வலயக்கல்விப்பணிப்பாளர் ரி.ஜோன் குயின்ரஸ் மற்றும் அயல் பாடசாலைகளின் அதிபர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
-குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அயல் பாடசாலை அதிபர்களிடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எடுக்கும் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டி நூல்களையும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-
(1-03-2017)
-பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் ஜோசப் அகஸ்ரீன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் ஆகியோர் குறித்த வகுப்பறைக்கட்டிடத்தொகுதியினை திறந்து வைத்தனர்.
-இதன் போது மடு வலயக்கல்விப்பணிப்பாளர் ரி.ஜோன் குயின்ரஸ் மற்றும் அயல் பாடசாலைகளின் அதிபர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
-குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அயல் பாடசாலை அதிபர்களிடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எடுக்கும் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டி நூல்களையும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-
(1-03-2017)
மடு வலயக்கல்விப்பணிமனைக்குற்பட்ட மன்-கருங்கண்டல் பாடசாலையில் அமைக்கப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடம் திறந்து வைப்பு-(படம்)
Reviewed by NEWMANNAR
on
March 01, 2017
Rating:

No comments:
Post a Comment