தீர்மானங்களால் என்ன முன்னேற்றம்? ஐ.நா கண்காணிக்க வேண்டும் - வடக்கு மாகாண முதலமைச்சர்,
ஐ.நா மனிதவுரிமை பேரவை யில் 2015-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அமுல்ப டுத்துவதற்கு இலங்கைக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், தீர் மானங்களை நிறைவேற்றுவதில் என்ன முன்னேற்றம் உள்ளது என ஒவ்வொரு மாதமும் ஐக்கிய நாடுகள் சபை கண்காணிக்க வேண்டும் என ஐ.நாவிடம் கோரவுள்ளதாக தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள இரண்டு வருடத்தில் என்ன முன்னேற்றம் என்பது தொடர்பில் ஐ.நா கண்காணிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், ஆகிய மாவட்டங்களை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடைய பிரநிதிகளுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர், அமைச்சர், உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கிடையில் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அலுவல கத்தில் நேற்று பிற்பகல் ஒரு மணியிலிருந்து 3 மணிவரை சந்திப்பொன்று நடைபெற்றது.
இந்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வடக்கில் உள்ள அனைத்து மாவட்ட த்தை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சார்பில் பிரதிநிதிகளை சந்தித்திருந்தோம். இவர்களில் பலர் ஆணைக்குழுக்கள் பலவற்றின் முன்னிலையில் சாட்சியமளித்திருந்தார்கள். ஆனால் இன்னமும் ஒன்றும் நடைபெறவில்லை. அவ்வாறு நடைபெறாத வற்றை எம்மால் நடத்த முடியுமோ என்பது கேள்விக்குறிதான்.
எனினும் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. 19 ஆயிரம் பேர்வரையில் அதில் சாட்சியமளித்திருந்தனர்.
எனவே அதனை வெளியிட்டால் மக்கள் கூறியவை அதில் சரியாக பதியப்பட்டுள்ளதாக என்று பார்க்க முடியும். அடுத்து அந்த அறிக்கையை வாசிப்பவர்கள் இத்தகைய விடயங்கள் தான் நடைபெற்றன என்பதனையும் அறியமுடியும்.
இந்த அறிக்கையின் பிரகாரம் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. ஆகவே அந்த அறிக்கையை உடன் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்க உள்ளேன். மேலும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீதிமன்றங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வழ க்குகள் பொலிஸாரின் தாமதத்தினால் நீண்டு செல்கின்றன அவற்றை விரைவில் முடிவு க்கு கொண்டுவருமாறு ஜனாதிபதியிடம் கோரவுள்ளேன்.
தமது பிள்ளைகள் அல்லது உறவுகள் காணாமல்போன பின்னர் எங்கோ ஓர் இடத்தில் தனிப்பட்ட ரீதியில் கண்டதாக கூறுகின்றார்கள். இது ஒரு முக்கியமான விடயம் தங்களுடைய பிள்ளைகளை காணாமல் போன தாக கூறப்படும் தினத்திலிருந்து நான்கு ஐந்து வருடங்களின் பின்னர் கண்டதாக அத்தாட்சியுடன் படங்கள் வைத்து காட்டுகின்றனர். அவற்றிலிருந்து தடயங்களை எடுத்து விசாரணை செய்ய முடியும். ஜனாதிபதியோடும் நிற்கின்ற பிள்ளைகளும் எங்கோ ஓர் இடத்தில் இருந்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கியுள்ள நிலையில், மாதத்துக்கு ஒருமுறை என்ன முன்னேற்றம் நடைபெற்றது என்பது தொட ர்பில் ஐ.நா தெரிந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை ஐ.நாவிற்கு தெரியப்படுத்தவுள்ளோம். குறிப்பாக காணாமல் ஆக்க ப்பட்டார் விடயத்தில் என்ன முன்னேற்றம் உள்ளது என்பது கண்டறியப்பட்ட வேண்டும் எனவும் முதலமைச்சர் தனது கருத்தை தெரிவித்தார்.
தீர்மானங்களால் என்ன முன்னேற்றம்? ஐ.நா கண்காணிக்க வேண்டும் - வடக்கு மாகாண முதலமைச்சர்,
Reviewed by Author
on
March 30, 2017
Rating:

No comments:
Post a Comment