லண்டன் மக்களை வெளியேற்ற வைத்த பாரிய வெடிகுண்டு!
பிரித்தானியா
தலைநகர் லண்டனில் இரண்டாம் உலக யுத்தத்தில் பயன்படுத்திய பாரிய வெடிகுண்டு
ஒன்று கண்டெடுக்கப்பட்டத்தை அடுத்து நகரின் பெரும்பகுதி மக்களை
வெளியேற்றப்பட்டனர்.
லண்டனின் வட-மேற்கு பகுதியில் குறித்த வெடிகுண்டு ஒன்றை அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.
இரண்டாம்
உலகப்போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட இந்த வெடிகுண்டானது இன்னமும் அதே
ஆற்றலுடன் இருப்பதாக கூறப்படுகிறது. 227 கிலோ எடை கொண்ட இந்த வெடிகுண்டானது
Brent பகுதியில் அமைந்துள்ள Brondesbury பூங்காவில் மிக ஆழத்தில்
புதையுண்டு இருந்ததை கண்டு பிடித்துள்ளனர்.
இதனையடுத்து லண்டனின் பெரும்பகுதி மக்களை பாதுகாப்பு கருதி குறிப்பிட்ட பகுதியில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.
இன்று
காலையில் குறித்த பகுதியை பார்வையிட்ட ராயல் அமைப்பின் பொறியாளர்கள்
மற்றும் லாஜிஸ்டிக்ஸ் கார்ப்ஸ் அதிகாரிகள் பல அடுக்கு பாதுகாப்பு அரணை
அமைத்துள்ளனர்.
இது குறித்த வெடுகுண்டை பாதுகாப்பான முறையில் அப்பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு மாற்ற உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெடிகுண்டை
செயலிழக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக கூறும் அதிகாரிகள்
வெள்ளிக்கிழமை மாலை வரை இதற்குரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரும் என
தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களின்
பாதுகாப்பு கருதி சுற்றுவட்டாரத்தில் உள்ள பாடசாலைகள், குடியிருப்புகள்
மற்றும் தொழில் நிறுவனங்கள் என அனைத்தையும் மூட உத்தரவிட்டுள்ளதாக
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லண்டன் மக்களை வெளியேற்ற வைத்த பாரிய வெடிகுண்டு!
Reviewed by Author
on
March 03, 2017
Rating:

No comments:
Post a Comment