இலங்கை வெற்றி....வானவேடிக்கை காட்டிய பெரேரா...
இலங்கை ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை ஏ அணி 48 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதன் அடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அதிரடி ஆட்டத்தினை வெளிக்காட்டியது.
குறிப்பாக ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய குஷால் பெரேரா மற்றும் குணாதிலக ஆகியோர் முதல் விக்கெட்டுகளுக்காக 123 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
இதில் குசல் பெரேரா 59 ஓட்டங்களையும், குணதிலக 64 ஓட்டங்களையும் அணிக்காக பெற்றுக்கொடுத்தனர். இவர்களின் ஆட்டத்திற்கு பின் இடைநிலை வீரர்கள் சோபிக்க தவறினர்.
இருந்தாலும் 6 ஆவது வீரராக களமிறங்கிய திசர பெரேரா அதிரடியாக துடுப்பெடுத்தாடி 56 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு அணியில் இணைந்துள்ள திசர பெரேரா 5 ஆறு ஓட்டங்கள் மற்றும் 2 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக இந்த எண்ணிக்கையை பெற்றுக்கொண்டார்.
278 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை மழை குறிக்கிட்டதால் 48 ஓவர்களாக போட்டி மட்டுப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் பந்துவீச்சில் இங்கிலாந்து லயன்ஸ் அணி சார்பாக கிரிங் ஓவர்டன் 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
இங்கிலாந்து அணிக்கு டக்வர்த் லூவிஸ் முறைப்படி 43 ஓவர்களில் 278 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 43 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுகளை இழந்து 230 ஓட்டங்களை பெற்றிருந் போது மீண்டும் மழை குறுக்கிட்டது.
இதனால் இலங்கை அணிக்கு டக்கவர்த் லூவிஸ் முறைப்படி 47 ஓட்டங்களால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இத்தனைநாள் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 1-0 என்ற அடிப்படியில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை வெற்றி....வானவேடிக்கை காட்டிய பெரேரா...
Reviewed by Author
on
March 03, 2017
Rating:

No comments:
Post a Comment