இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் தொடரும் நெருக்கடி ...!
இலங்கை குறித்து இன்னும் உறுதியான தீர்மானம் ஒன்றை கொண்டு வரவேண்டும் என சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனிவா பணிப்பாளர் ஜோன் பிஷர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்ட தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகி இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
இந்நிலையில், இலங்கை குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் நேற்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார்.
இதன்படி, இலங்கையில் நல்லிணக்கம், நீதி, மறுசீரமைப்பு மற்றும் வாக்குறுதிகள் என்பவற்றை மெய்ப்பிப்பதற்கு இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டியுள்ளது என்பதை குறித்த அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.
எனவே, இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரையில், சர்வதேசத்தின் கண்காணிப்பு தொடர வேண்டும்.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த கூட்டத் தொடரில் உறுதியானதும், காத்திரமானதுமான தீர்மானம் ஒன்றை கொண்டுவர வேண்டும் என ஜோன் பிஷர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் தொடரும் நெருக்கடி ...!
Reviewed by Author
on
March 04, 2017
Rating:

No comments:
Post a Comment