மன்னார் பொ.விளையாட்டு மைதானத்தில் போட்டி நடத்த முற்பதிவு செய்யாததன் காரணத்தினால் மைதான கதவுகளை பூட்டி வைத்த நகரசபை.
மன்னார் கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று சனிக்கிழமை காலை உதைப்பந்தாட்ட போட்டி இடம் பெற இருந்த போதும் மைதானத்திற்கான முற்பதிவு செய்து பணம் செலுத்தாததன் காரணமாக மைதானத்தின் கதவுகள் பூட்டப்பட்டு போட்டிகள் இடை நிறுத்தப்பட்டிருந்தது.>
> உடனடியாக ஏற்பாட்டாளர்கள் மன்னார் நகர சபைக்குச் சென்று பணம் செலுத்திய நிலையில் போட்டி நடாத்த அனுமதி வழங்கப்பட்டது.
>
> மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் குறித்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போது மன்னார் கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் வருகை தந்திருந்த நிலையிலே மைதானம் முற்பதிவு செய்யாத நிலையிலே நகரசபை செயலாளரின் உத்தரவில் மைதான கதவுகள் பூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
> உடனடியாக ஏற்பாட்டாளர்கள் மன்னார் நகர சபைக்குச் சென்று பணம் செலுத்திய நிலையில் போட்டி நடாத்த அனுமதி வழங்கப்பட்டது.
>
> மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் குறித்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போது மன்னார் கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் வருகை தந்திருந்த நிலையிலே மைதானம் முற்பதிவு செய்யாத நிலையிலே நகரசபை செயலாளரின் உத்தரவில் மைதான கதவுகள் பூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் பொ.விளையாட்டு மைதானத்தில் போட்டி நடத்த முற்பதிவு செய்யாததன் காரணத்தினால் மைதான கதவுகளை பூட்டி வைத்த நகரசபை.
Reviewed by NEWMANNAR
on
March 04, 2017
Rating:

No comments:
Post a Comment