ஐ.நாவே இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்காதே: வவுனியாவில் ஆர்ப்பாட்டம்-Photos
வவுனியாவில், ஐ.நா மனிதவுரிமைகள் பேரவை இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கக் கூடாது எனும் கோரிக்கையை முன்வைத்து பொதுமக்களால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் மேற்கொண்டு வரும் இடத்திற்கு முன்பாக இன்று மதியம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், “ஐ.நாவே இலங்கை அரசாங்கத்திற்கு கால நீடிப்பை வழங்காதே, சர்வதேசமே எங்களுக்கு தீர்வைத் தா, வழங்காதே வழங்காதே காலநீடிப்பை வழங்காதே, சர்வதேசமே நீதியை புதைக்காதே” என்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்ததுடன், பல கோசங்களையும் எழுப்பினர்.மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூக அமைப்புக்களின் பிரமுகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஐ.நாவே இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்காதே: வவுனியாவில் ஆர்ப்பாட்டம்-Photos
Reviewed by NEWMANNAR
on
March 23, 2017
Rating:

No comments:
Post a Comment