வவுனியா மாவட்டத்தில் க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் விபரம்....
2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று அதிகாலை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த. சாதாரண தரத்தில் 234 மாணவர்கள் தோற்றிய நிலையில் 10 மாணவர்கள் 9A சித்தியும், 14 மாணவர்கள் 8A, B சித்தியும் பெற்று பெருமை சேர்த்துள்ளார்கள்.
இதன்படி ச.சிவலக்சன், ச.மதுமிதன், வி.ஜரூஸ், சி.சனிஸ்வ்காந், ஜெ.பிரவீன், உ.ஜதுசன், பி.கீர்த்திகன், ப.கோகுலவதனன், க.கிசோபன், க.திவாகரன் ஆகியோர் 09A சித்தி பெற்றுள்ளனர்.
சி.பகவான், யோ.மயூரன், ஜே.ஜெபநேசன், தி.செல்வன், ரா.சயுலன், சி. பிருசாந், ம.லக்சியன், கு.தார்மீகன், ப.துரைஞானவேலன், பா.அபிரதன், அ.ஜெரோசன், ல.கிருபாகரன், ச.சிவகுமாரன் ஆகியோர் 08A, B சித்திகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா மாவட்டத்தில் க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் விபரம்
2016 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்று அதிகாலை வெளியாகிய நிலையில் வவுனியா மாவட்டத்தில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி சாதனை படைத்துள்ளது.
இதனடிப்படையில் தமிழ் மொழி மூலத்தில் 9 மாணவிகள் 9 ஏ சித்திகளையும், 11 மாணவிகள் 8 ஏ மற்றும் பி சித்திகளையும் பெற்றுள்ளனர்.
அதன்படி தமிழ் மொழி மூலத்தில் மயூரி பேரின்ப நாயகம், கிசோபிகா சஜரூபன், நிதிகா கரிகரசக்தி, சுஜித்திகா ஜெயபற்றிக் ரஞ்சித், தர்சிகா கிரிதரன், கிருசிகா திருச்செல்வம், சாம்பவி தவராசா, கோபிசாளினி குமாரசிங்கம், லதுசிகா கிருபானந்தம் ஆகிய மாணவிகள் 9 ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.
இதேவேளை ஆங்கில மொழி மூலத்தில் 9 மாணவிகள் 9 ஏ சித்திகளையும், 5 மாணவிகள் 8 ஏ மற்றும் பி சித்திகளையும் பெற்றுள்ளனர்.
அதன்படி சஜனி கணேசலிங்கம், சின்மதி சத்தியலிங்கம், மதுசா ஜெயக்குமார், லபிரா அகிலநாயகம், சங்கவி புவனேசன், சரோனி இவன்சிலின் அன்ரனி ஜெயனாத், அட்சயா சிவபாதசுந்தரம், சரண்ஜா சூரியகுமாரன், குசேதா குகநாதன் ஆகிய மாணவிகள் ஆங்கில மொழி மூலத்தில் 9ஏ பெற்றுள்ளார்கள்.
இரண்டாம் இணைப்பு
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் 138 பேர் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியுள்ளதுடன், சங்க மோகன் 9ஏ, வராகி வாசீசன் 9ஏ, சங்கவி கனகரட்ணம் 9ஏ, வினோசிகா மககேஸ்வரன் 8ஏ, டேனுசா ஸ்ரீதரன் 8ஏ, இலக்சிஜா அரிபூரணநாதன் 8ஏ மற்றும் 6மாணவர்கள் 7ஏ சிறப்பு சித்திகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியலாயத்தில் ஆனந்தராஜா சங்கீதன் 7ஏ 2பி, பிலோமீரா அன்ரனி ஜோர்ஜ் விக்டர் ராஜா 7ஏ பி சி, றொகேந்திரன் சயந்தன் 6ஏ பி சி எஸ், சுகுணலிங்கம் சுரேஸ் 4ஏ 3சி 2எஸ், கவிப்பிரியா கணேசன் 4ஏ 2பி சி எஸ், சுகாந்தினி பிரான்விக்னராஜா 4ஏ 2பி சி எஸ் ஆகிய மாணவர்கள் சிறப்பு சித்தி பெற்றுள்ளனர்.
வவுனியா மதீனா வித்தியலாயத்தில் அப்துல் மஜித் முகமட் மனாஸ் 5ஏ 1பி 3சி, ஹாஜாமுகைதீன் றியாஸ் 1ஏ 3பி 3சி 2எஸ் ஆகிய மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர். வவுனியா விபுலானந்தாக்கல்லூரியில் 167 பேர் வரையில் பரீட்சைக்கு தோற்றியிருந்த நிலையில் ஆர்.மிதுசிகா 9ஏ, ஏஸ்.நிதுர்சன் 8ஏ பி, ரி.தர்சிகா 8ஏ பி, கே. தவாரகன் 8ஏ பி, ரி.விதுரா 8ஏ சி, என்.அபினயா 8ஏ சி ஆகிய மாணவர்கள் சிறப்பான சித்திகளை பெற்றுள்ளனர்.
வவுனியா பரமேஸ்வரா வித்தியலாலயத்தில் அரியகுலேந்திரன் அஜித்குமார் 8ஏ சி, விஜயவீரன் சகிலன் 8ஏ எஸ், இராம்ராஜ் சரத்குமார் ஏ 3பி 3சி 2எஸ் ஆகிய மாணவர்கள் சிறப்பு சித்திகளை பெற்றுள்ளனர்.
மேலும் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியலாயத்தில் 147 பேர் பரீட்சைக்கு தோற்றியிருந்த நிலையில் ர.துலக்சன் 8ஏ பி, மா.டிலோஜினி 8ஏ பி, சொ.யாழினி 8ஏ பி, நி.தேனுசன் 8ஏ சி ஆகிய மாணவர்கள் சிறப்பு சித்திகளை பெற்றுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் விபரம்....
Reviewed by Author
on
March 29, 2017
Rating:

No comments:
Post a Comment