88 வருட வரலாற்றை மாற்றிய மாணவர்கள்....
கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை இந்துக்கல்லூரி வரலாற்றின் முதல் தடவையாக ஐந்து மாணவர்கள் ஒன்பது ஏ சித்திகளை பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர் அ.ஜெயஜீவன் தெரிவித்தார்.
குறித்த பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 88 வருடங்கள் கடந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஐந்து மாணவர்கள் ஒன்பது ஏ சித்தி பெற்றுள்ளனர்.
இதில் வி.ஹர்ஷாந், கோ.அனுராஜிதன், ந.அஞ்சனன், க.அஞ்சைகுமார், த.கேந்துஜன் ஆகியோரே ஒன்பது ஏ சித்தி பெற்றுள்ள மாணவர்களாவர்.
வாழைச்சேனை இந்துக்கல்லூரி அதிபர் அ.ஜெயஜீவன், பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் க.ஜெகதீஸ்வரன், பாடசாலை பழைய மாணவ சங்க பிரதிநிதிகள் குறித்த மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இப்பாடசாலையானது வளப்பற்றாக்குறை காணப்படாலும் தாங்கள் இவ்வாறான சித்திகளை பெற்றுள்ளதுடன், மேலும் பல மாணவர்கள் சித்தி பெறுவதற்கு பாடசாலையை தரமுயர்த்தி உதவுமாறு அம்மாணவர்கள் கேட்டுக் கொண்டனர்.
88 வருட வரலாற்றை மாற்றிய மாணவர்கள்....
Reviewed by Author
on
March 29, 2017
Rating:

No comments:
Post a Comment