முள்ளிக்குளம் மக்களின் உரிமைப்போராட்டம் 10 ஆவது நாளாகவும் தொடர்கின்றது-அமைச்சர் றிஸாட் பதியுதீன் உற்பட அரசியல் பிரமுகர்கள் பலர் நேரில் சென்று சந்திப்பு.(படம்)
முள்ளிக்குளம் கிராம மக்கள் தமது பூர்வீக நிலங்களை கடற்படையினரிடம் இருந்து மீட்பதற்காக முன்னெடுத்து வருகின்ற கவனயீர்ப்பு போராட்டம் தொடர்ந்து 10 ஆவது நாளாகவும் இன்று சனிக்கிழமை முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.
குறித்த மக்களின் உரிமை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பொது அமைப்புக்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண அமைச்சர்கள்,வடமாகாண சபை உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினரும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருவதோடு,மக்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் இன்று(1) சனிக்கிழமை 10 ஆவது நாளாகவும் முள்ளிக்குளம் மக்களின் போராட்டம் முன்னெடுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் இன்று சனிக்கிழமை மாலை அமைச்சர் றிஸாட் பதியுதீன், மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் உற்பட பலர் நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர்
மன்னார் நிருபர்-
(1-04-2017)
குறித்த மக்களின் உரிமை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பொது அமைப்புக்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண அமைச்சர்கள்,வடமாகாண சபை உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினரும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருவதோடு,மக்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் இன்று(1) சனிக்கிழமை 10 ஆவது நாளாகவும் முள்ளிக்குளம் மக்களின் போராட்டம் முன்னெடுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் இன்று சனிக்கிழமை மாலை அமைச்சர் றிஸாட் பதியுதீன், மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் உற்பட பலர் நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர்
மன்னார் நிருபர்-
(1-04-2017)
முள்ளிக்குளம் மக்களின் உரிமைப்போராட்டம் 10 ஆவது நாளாகவும் தொடர்கின்றது-அமைச்சர் றிஸாட் பதியுதீன் உற்பட அரசியல் பிரமுகர்கள் பலர் நேரில் சென்று சந்திப்பு.(படம்)
Reviewed by NEWMANNAR
on
April 01, 2017
Rating:

No comments:
Post a Comment