யாழ். குடாநாடு உட்பட 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!
யாழ். குடாநாடு உட்பட 11 மாவட்டங்களுக்கு டெங்கு நோய் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தற்போது டெங்கு நோய் தாக்கம் அதிகமாக பரவி வருகின்றமையால் 11 மாவட்டங்களையும் டெங்கு எச்சரிக்கை மாவட்டங்களாக பதியப்பட்டுள்ளது.
அந்த வகையில் கொழும்பு, கம்பஹா, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், கல்முனை, இரத்தினபுரி மற்றும் கேகாலை போன்ற மாவட்டங்களையே இவ்வாறு எச்சரிக்கைக்குரிய மாவட்டங்களாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த மூன்று மாதங்களில் யாழ்ப்பாணத்தில் 25 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். குடாநாடு உட்பட 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!
Reviewed by Author
on
April 02, 2017
Rating:

No comments:
Post a Comment