ஈழ மண்ணின் தனிச்சிறப்புமிக்க திருக்கேதீஸ்வரம் துரிதகதியில் புனரமைப்பு பணிகள்…..முழுமையான படங்கள் இணைப்பு
மன்னார் மாவட்டத்தின் தமிழர்களின் அடையாளமாக பழமைவாய்ந்த பாடல்பெற்ற திருத்தலம் திருக்கேதீஸ்வரம் .
திருக்கேதீஸ்வரமானது பல 1990-2002 யுத்தசு10ழ்நிலைகளுக்கு 2003-2013 அப்பால் தற்போது புனரமைப்பு பணிகள் ஆரம்பமாகியுள்ளது. அனைவரும் அறிந்ததே…
இந்திய அரசாங்கத்தின் நிதிப்பங்களிப்பில் சுமார் 700கோடி ரூபாயில் புதுப்பொலிவு பெறவுள்ளது மிகவும் அனுபவம் பெற்ற ஆசாரிகள் மற்றும் சிற்பிகளின் அயராத உழைப்பிலும் ஆலயபரிபாலனசபையினரின் ஒத்துழைப்புடனும் விரைவாக பணிகள் நடைபெற்று வருகின்றன…மகாமண்டபத்திற்கு 336கோடி ரூபாவும் ஏனைய மணி வசந்த மண்டபங்கள் திருச்சுருவங்கள் இதரப்பணிகளுக்கும் என மொத்தமாக 700கோடிரூபா நிதியில் புனரமைப்பு பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.
இதில் என்ன விசேஷம் என்றால் முற்றுமுழுதாக கருங்கல்லினால் அழகிய சிற்பவேலைப்பாடுகள் நிறைந்த கண்ணைக்கவரும் வடிவில் அமைக்கப்படகின்றது.
இந்தியாவில் இருந்து வருகை தந்து மருத்துவர் குணசேகரம் மேற்பார்வையில் ஆசாரி விஜயகுமார் தலைமையில் சுமார் 40மேற்பட்ட ஆசாரிகள் சிற்பிகள் இவர்களுடன் திருக்கேதீஸ்வரம் ஆலயப்பணி திருப்பணிச்சபை தொண்டர்கள் இணைந்து விரைவான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புலவர் திருநாவுக்கரசு ஐயா அவர்களிடம் இந்த திருத்தும்பணிகள் எப்போது நிறைவடையும் என்று கேட்ட போது…. இன்னும் சுமார் 3வருடங்கள் அதாவது 2020 ஆகும் சிவபெருமானின் திருவருள் கூடினால் மிகவிரைவாக பூரணமாகிவிடும்.
கருங்கல் இந்தியாவில் இருந்து கொண்டுவருவது தாமதம் ஆகாமல் இருக்குமானால் மிகவிரைவில் பணிகள் பூர்த்தியாகும் இப்பணிபூரணமாக முடிந்தால் மக்களின் வருகையானது மகாசிவராத்திரி போலதான் இருக்கும் உங்கள் மன்னாரில் சிறப்பான ஆலயமாக இருக்கும் அதிகமான பக்தடியார்க்ள வருகைதருவார்கள்.
ஈழ மண்ணின் தனிச்சிறப்புமிக்க திருக்கேதீஸ்வரம் துரிதகதியில் புனரமைப்பு பணிகள்…..முழுமையான படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
April 02, 2017
Rating:

No comments:
Post a Comment