மன்னார் பேசாலையில் பாரியம்பரிய உடக்கு பாஸ் நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது படங்கள் இணைப்பு.... 2நாள் நிகழ்வு இன்று மாலை 6- 30மணிக்கு
மன்னார் மறைமாவட்டத்தின் பேசாலை புனித வெற்றிநாயகி ஆலய பங்கு மக்களால் பேசாலையில் பாரியம்பரிய உடக்கு பாஸ் வியாழன், வெள்ளி (06-07.04.2017) ஆகிய இரு தினங்கள் காண்பிக்க இருப்பதால் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பெருந் தொகையான மக்கள் வருகை தர இருப்பதாக தெரிய வருகிறது.
கிறிஸ்தவர்களின் தவக்காலமான கிறிஸ்துவின் பாடுகளின் சிந்தனையை தூண்டும் விதமாக காண்பிக்கப்படும் இவ் உடக்கு பாஸானது பாரம்பரிய ஒரு பரிசுத்த நிகழ்வாக இருப்பதால்
இவ் பரிசுத்த நிகழ்வை நாட்டின் பலபாகங்களில் இருந்தும் பல்லின மக்களும் பாரம்பரிய உடக்கு பாஸ் நிகழ்வை காண புனித பத்திமா பாடசாலை மைதானத்தில் பெரும்திரளாக கூடியுள்ளனர்.
விசேட விதமாக அமைக்கப்பட்ட உயர்ந்த மேடையலங்காரங்கள் திருவுருவங்கள் இசைகள் முழங்க 500ற்கும் மேற்பட்ட கலைஞர்களின் அயராத உழைப்பின் மூலம் எஸ்.ஏ,மிராண்டா அவர்களின் நெறியாள்கையில் திருப்பாடுகளின் காட்சி மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகையுடன் குருமுதல்வர் விக்ரர்சோசை அருட்தந்தை புனித வெற்றிநாயகி ஆலயத்தில் பங்கு தந்தை அருட்பணி. அலெக்ஸ்சாண்டர் பெனோ அடிகளாரின் தலைமையில் விஷேட ஆராதனையின் பின் ஆசிர்வதித்தலுடன் ஆரம்பமானது.
தொகுப்பு-வை.கஜேந்திரன்-
மன்னார் பேசாலையில் பாரியம்பரிய உடக்கு பாஸ் நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது படங்கள் இணைப்பு.... 2நாள் நிகழ்வு இன்று மாலை 6- 30மணிக்கு
Reviewed by Author
on
April 07, 2017
Rating:

No comments:
Post a Comment