அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மண்ணில் பொலித்தீன் பாவனையை குறைக்க நடவடிக்கை…22-04-2017 முதல்…


மன்னார் மாவட்டத்தின் தூய்மையான சுகாதாரத்தினை பேணுவோம் எனும் சிந்தனையுடன் வருகின்ற 22ம் திகதி புவி தினத்தினை முன்னிட்டு இலங்கையில் அதுவும் வடகிழக்கு மாகாணங்களில் "பிளாஸ்ரிக்கின் பிடியில் பூமி சிதைவடையும்" தன்மையை கருத்தில் கொண்டு பொலித்தீன் பாவனையில் இருந்து விடுபடுவோம் எனும் விழிப்புனர்வு ஏற்படுத்தும் நோக்கில்
மாகாணங்களில் உள்ள மாவட்டங்களில் பொலித்தீன் பாவனையை குறைத்து முற்று முழுதாக இல்லாமல் செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பமாகிள்ள நிலையில் மன்னார் மாவட்டத்திலும் பொலித்தீன் பாவனையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை செயற்படுத்த மன்னார் நகரசபை பிரதேச சபையும் வேலைத்திட்டத்தினை ஆரம்பிக்கவுள்ளதால்.....


 அரசஅரசசார்பற்ற நிறுவனங்கள் திணைக்களங்கள் பாடசாலைகள் வணக்கவழிபாட்டுத்தளங்கள் பொதுமக்கள் அனைவரும் ஒன்னினையவேண்டும் எனவும் கழிவுகள் குப்பைகளில் பொலித்தீனுக்கென தனியாக பெறுவதற்கு நகரசபை நடவடிக்கைமேற்கொள்ளவுள்ளது. அதற்கமைய திணைக்களங்கள் பாடசாளைகள் வைத்தியசாலை அனைத்திற்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் உக்கும் கழிவுகளுக்கு என்றும் உக்காத பொலித்தீனுக்கென்றும் தனியாக பைகளிலோ கூடைகளிலோ போட்டுவைக்கவேண்டும் எனவும் அதைதனித்தனியாக நகரசரைப துப்பரவுப்பணியாளர்கள் பெற்றுக்கொள்வார்கள் அவ்வாறு தனத்தனியாக பிரித்து போடப்படாத கழிவுகளை நகரசபை துப்பரவுபணியாளர்கள் பொறுப்பேற்க மாட்டார்கள் எனவும் இத்திட்டசெயற்பாடுகள் அனைத்தும் புவிதினமான 22-04-2017 திகதியில் இருந்து நடைமுறைக்கு வருகின்றது என்பதினை நகரசபைச்செயலாளர் தெரிவித்தார்.

பொலித்தீனுக்கு மாற்றாக கடதாசிப்பைகள் துணிப்பைகள் பனையோலைப்பைகள் என்பன பயன்படுத்த ஏற்பாடுகள் செய்யப்படுவதோடு யாழ்ப்பான மாவட்டத்தில் இச்செயற்பாடு நடைமுறைக்கு வந்துள்ளது அதனைத்தொடர்ந்து மன்னார் மாவட்டம் இச்செயற்பாட்டினை முன்னெடக்கப்போகும் 2டாவது மாவட்டமாக உள்ளது. இதற்கு மக்கள் வர்த்தகநிலையங்கள் தினைக்களங்கள் அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் தூய்மையான ஆரோக்கியமான வாழ்வுக்கு ஒன்றினைவோம் என்றார்.

பொலித்தீன் செயற்பாடு என்பது பற்றி---
இலங்கையில் 20 மைக்குறோன்கள் மற்றும் அதற்கு குறைவான தடிப்புடைய பிளாஸ்ரிக்பைகளுக்கு 2007ம் ஆண்டு முதல் தடைவிதிக்கப்பட்டள்ளது அப்போதைய சுற்றுச்சு10ழல் அமைச்சரும் தற்போதைய மாண்புமிகு ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனா இத்தடையைக்கொண்டுவந்திருந்தார்.அவர்2015ம் ஆண்டு பதவியேற்றதின் பின்னர் இத்தடைச்சட்டம் 2016-01-01-திகதியில் இருந்து இறுக்கமாக கடைப்பிடிக்கப்படும் எனவும் மீறுவோருக்கு 10000ரூபா தண்டம் அல்லது 2வருடங்களுக்கு சிறைத்தண்டனை என்றும் கண்டிப்பாக்கப்பட்டது.எனினும் செயலுருப்பெறவில்லை..20மைக்றோன்களைவிட மிகக்குறைவான தடிப்புடைய பிளாஸ்ரிக் பைகளின் உற்பத்தியும் விற்பனையும் சட்டவிரோதமாகத் தங்கு தடையின்றி இன்றளவும் தொடரத்தான் செய்கின்றது.

சத்தம் இன்றி மனிதஇனத்தினையும் ஏனைய உயிரினங்களையும் இயற்கையினையும் சாகடித்துக்கொண்டிருக்கும் பொலித்தீன் சாகாவரம் பெற்றுள்ளது. மனிதவிஞ்ஞான கண்டுபிடிப்பின் கொடூரங்களில் பொலித்தீனே முதன்மையாக இருக்கின்றது.

பொலித்தீன் எந்நிலையிலும் மண்ணோடு மண்ணாக அழியாது உக்காது மக்காது சிதைவடையாது  இதனாலேதான் தனித்துவமாக திகழ்கின்றது.
பெலித்தீன் நச்சுக்கசிவானது பல பாரீய அழிவுகளை செய்துகொண்டிருக்கின்றது நாம் அறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் மனிதத்தேவைகளின் பெரும்பகுதியை பொலித்தீன் உற்பத்திப்பொருட்களே நிறைவேற்றுகின்றன சாப்பாடு சுத்தப்பயன்படும் லன்சீற் முதல் பிள்கைள் விளையாட்டுப்பொருட்கள் குடிபாணங்பகள் பொட்டில்கள் மூலம் உடலில் பொலித்தீன் நச்சுக்கசிசு அசற்றல்டிகைட்டு கலக்கிறது. பொலித்தீன் பைகளை உணவாக உண்ணுகின்ற உயிரினங்கள் செமிபாடின்றியும் உணவுக்குழாய் அடைப்புக்கள் ஏற்பட்டும் இறக்கின்றன கடல்களில் அதிகளவு சேருகின்ற பொலித்தீன்களால் கடல்வாழ்உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன கடலின் ஒவ்வொர சதுரமைல் பரப்பளவிலும் 46000 பிளாஸ்ரிக்துண்டுகள் மிதப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவை( டீ.டீ.ரி) போன்ற கிருமிநாசினிகளை ஈர்த்து நஞ்சாகமாறி வருகின்றது.

இதனால் சுமார் ஒருமில்லியன் கடற்பறவைகளும் ஒரு லட்சம் கடற்பாலூட்டிவிலங்குகள் எண்ணுக்கணக்கில்லாத மீன்கள் பலியாகி வருவதாக ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் அறிக்கையில் குறிப்பிடப்ட்டுள்ளது. அதேபோல் பூமியில் பொலித்தீன் புதைவதால் வளமான நிலங்கள் பற்றீரியா பங்கஸ் பிரிகைகள் நடைபெறாமல் வளமற்றமண்ணாக மாறி பயிர்விளைச்சல் செய்யமுடியாமை அதேபோல் காடுகளில் தனது ஆதிக்கத்தினை செலுத்துகின்றது பொலித்தீன்.

பிளாஸ்ரிக் கழிவுகளை எரித்து அகற்றுவது என்பது இலேசான காரியமல்ல தனது இருப்பின்போது அச்சுறுத்தும் பிளாஸ்ரிக் இறப்பின்போது முன்னரை விட அபாயகரமாக அவதாரம் எடுக்கும் பிளாஸ்ரிக்கழிவுகளை எரிப்பதால் டையொக்சின்-(dioxin) என்ற நச்சு உருவாகி காற்றுடன் கலக்கின்றது.குளோறினை உள்ளடக்கமாக கொண்ட பொருட்களை உருவாக்கும் போது அவற்றை எரிக்கும் போதும் விடுவிக்கப்படும் 100ற்றுக்கும் மேலான நச்சுக்கூறுகளையே இப்படி டையொக்சின்(dioxin) என்ற பொதுப்பெயரால் அழைககின்றார்கள்.

மனிதன் உருவாக்கிய நஞ்சுகளில் இதுவேமிகவும் கொடூரமானது. கதிர் தொழிற்பாட்டுக்கழிவுகளுக்கு அடுத்தபடியாக பொலித்தீன் ஒப்பிடப்படகின்றது.இலகுவில் பிரிந்து அழியாத இந்த நச்சுஇரசாயனம் சுவாசக்காற்றின் மூலமும் உணவுச்சங்கிலி மூலமும் உடலினுள் நுழைகின்றது. கொழுப்பில் கரையக்கூடியது ஆகையால் அப்படியே உடல் இழையங்களில் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தி உயிரை மாய்க்கின்றது.

இங்கே குறிப்பிடப்பட்டுள்ள கருத்தானது.. பொலித்தீன் பாவனையினால் ஏற்படும் பயங்கரமான விளைவின் மேலோட்டமான கருத்துதான்.பொலித்தீன் பாவனையினால் இதுவரை அழிந்த உயிர்கள் மற்றும் பாதிப்புக்கள் அதுபோல இன்னும் அழியப்போகின்ற ஏற்படப்போகின்ற பாரியவிளைவுகளின் கணிப்பீடானது ஆய்வு முடிவுகளானது நாம் எண்ணிப்பார்காத அளவிற்கு மகவும் மோசமானதாகத்தான் இருக்கும்.

தன்தலையில் தானே மண்அள்ளிகொட்டும் யானைபோல மனிதன் கண்டுபிடித்த கண்டுபிடிப்புக்கள் தற்போது உள்ளது…

தொகுப்பு-வை.கஜேந்திரன்-

 










மன்னார் மண்ணில் பொலித்தீன் பாவனையை குறைக்க நடவடிக்கை…22-04-2017 முதல்… Reviewed by Author on April 13, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.