அண்மைய செய்திகள்

recent
-

ஒரே குடும்பத்தை சேர்ந்த 22 பேர் பலியான கொடூரம்! இரட்டை குழந்தைகளுடன் தந்தை கதறல்...


சிரியாவில் நடத்தப்பட்ட ரசாயன தாக்குதலில் அப்துல் ஹமீது அல்யூசுப் என்பவரின் 9 மாத இரட்டை குழந்தைகள் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 22 பேர் பலியாகியுள்ளனர்.

சிரியாவில் கடந்த செவ்வாய் கிழமை Khan Sheikhoun என்ற இடத்தில் நடத்தப்பட்ட ரசாயானத்தாக்குதலில் 30 குழந்தைகள் 20 பெண்கள் உட்பட மொத்தம் 80-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இந்த கோரசம்பவத்தில் Abdul Hamid al-Youssef என்பவரின் 9 மாத இரட்டையர் குழந்தைகளான Aya, Ahmed மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 22 பேர் பலியாகியுள்ளனர்.

Abdul Hamid al-Youssef தனது 9 மாத இரட்டைக் குழந்தையின் உயிரற்ற உடலை ஏந்திய படி குட் பை சொல்லுங்கள் குட் பை சொல்லுங்கள் என்று கண்ணீருடன் மன்றாடிக் கொண்டிருந்த காட்சி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தன் இரட்டைக் குழந்தைகளை அவர் சுமந்து சென்று ரசாயனத் தாக்குதலில் பலியான தனது 22 குடும்ப உறுப்பினர்கள் புதைக்கப்பட்ட இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றார்.
இது குறித்து அயா ஃபாதல் என்பவர் கூறுகையில், தான் தனது 20 மாத குழந்தையை மார்பில் அணைத்த படி, தெருவைச் சூழ்ந்த ரசாயன நச்சிலிருந்து காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் ஓடி வந்ததாகவும், ஆனால் தன் குடும்பத்தார் உட்பட இறந்தவர்களின் உடல்களுடன் லாரி ஒன்று வந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து நின்று விட்டதாகவும் கண்ணீருடன் கூறியுள்ளார்.

மேலும் சிரியாவில் நடந்த தாக்குதல்களிலே இது தான் மிகப்பெரிய தாக்குதல் என்றும் இது மிகவும் பயங்கரமானது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 22 பேர் பலியான கொடூரம்! இரட்டை குழந்தைகளுடன் தந்தை கதறல்... Reviewed by Author on April 07, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.