வாழைப்பழத்தில் இருந்த சிலந்தி பூச்சிகள் : வாடிக்கையாளர் அதிர்ச்சி...
Tesco நிறுவனத்தில் ஒரு வாடிக்கையாளர் வாங்கிய வாழைப்பழத்தில் சிலந்தி முட்டைகளும், சிலந்தியும் இருந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரத்தானியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பன்னாட்டு மளிகை மற்றும் பொது விற்பனை நிறுவனமான Tescoவுக்கு உலகெங்கிலும் 6000க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இந்நிலையில், பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜில் Jordan Platten (22) என்னும் இளைஞர் Tescoவுக்கு சென்று வாழைப்பழம் வாங்கியுள்ளார்.
பின்னர் தன் அலுவலகத்தில் வந்து அந்த வாழைபழத்தை Jordan பார்த்த போது அதன் மேல் சிலந்தி முட்டைகளும், சிலந்தியும் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் தனது டிவிட்டர் பக்கத்தில் Tescoவுக்கு டேக் செய்து, சிலந்தி முட்டையுள்ள வாழைபழத்தை கொடுத்து என்னை கொல்லை பார்க்கிறீர்களா என கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த Tesco தவறுக்கு வருந்துகிறோம், வாழைபழத்தை எங்கள் கடையில் திரும்ப கொடுத்து விடுங்கள் என கூறியுள்ளது.
இது குறித்து Tesco செய்தி தொடர்பாளர் கூறுகையில், நாங்கள் பல லட்சம் வாழைபழம் வாரத்துக்கு விற்கிறோம்.
எங்கள் நிறுவன ஊழியர்கள் கவனமாக தான் உள்ளனர். ஆனாலும் எப்போதாவது இப்படி ஆகி விடுகிறது என வருத்தம் தெரிவித்துள்ளார்.
வாழைப்பழத்தில் இருந்த சிலந்தி பூச்சிகள் : வாடிக்கையாளர் அதிர்ச்சி...
Reviewed by Author
on
April 07, 2017
Rating:

No comments:
Post a Comment