வெளிநாடு சென்ற இருவர் சடலமாக இலங்கை திரும்பிய பரிதாபம்...
பணியாளர்களாக வெளிநாடுகளுக்குச் சென்ற இருவரின் உடல்கள் சடலங்களாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
சவுதி அரேபியா மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளுக்குச் சென்ற பெண் ஒருவரினதும் ஆண் ஆகியோரே கொலை செய்யப்பட்டு அவர்களது உடல்கள் சடலங்களாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பில் நீர்கொழும்பு திடீர் மரண விசாரனை மருத்துவர் கீர்த்தி சிறிஜயந்தி விக்ரமரத்ன பிரேத பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.
5 வருடங்களுக்கு முன்னர் ஜோர்தான் ஆடை நிறுவனம் ஒன்றில் துணி வெட்டும் தொழிலுக்கு சென்ற பொல்கஹவெல, அலவ்வ வீதி மைத்திரி மாவத்தையை சேர்ந்த 50 வயதுடைய ஆர்.பீ.உபாலி ராஜபக்ச மற்றும் சவுதிக்கு பணி பெண்ணாக சென்ற மலையகப் பகுதியை சேர்ந்த 46 வயதுடைய பீ.பகவள்ளி என்ற ஒரு பிள்ளையின் தாயாரின் உடல்களே இவ்வாறு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் பிரதான வைத்தியர் மேற்கொண்ட பிரேத பரீசோதனைகளில் இந்த இரண்டு சம்பவங்களும் கொலை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய மனித கொலை தொடர்பில் விரைவான விசாரணை மேற்கொண்டு அந்த விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீர்கொழும்பு திடீர் மரண விசாரனை
மருத்துவர் கீர்த்தி சிறிஜயந்தி விக்ரமரத்ன கட்டுநாயக்க பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் பொலிஸார் சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வெளிநாடு சென்ற இருவர் சடலமாக இலங்கை திரும்பிய பரிதாபம்...
Reviewed by Author
on
April 06, 2017
Rating:

No comments:
Post a Comment