உள்ளக விசாரணைகளின் மூலம் தமிழ் மக்களுக்கு தீர்வு கிட்டாது: யோகேஸ்வரன்
உள்ளக விசாரணைகளின் மூலம் தமிழ் மக்களுக்கு தீர்வு கிட்டாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
தவறிழைத்த இராணுவ உறுப்பினர்களை ஜூரிகள் சபை குற்றமற்றவர்கள் என தீர்மானித்து விடுவித்துள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் இவ்வாறே தீர்ப்பு அமைந்திருந்தது.
உள்ளக விசாரணைகளின் மூலம் தமிழ் மக்களுக்கு நியாயம் கிட்ட வாய்ப்பில்லை.
எனவே சர்வதேச தலையீடு மிகவும் இன்றியமையாதது. சாட்சியங்கள் கூட இல்லாமல் செய்யப்பட்டு வருகின்றது.
நீதிமன்றில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை துரித கதியில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
உள்ளக விசாரணைகளின் மூலம் தமிழ் மக்களுக்கு தீர்வு கிட்டாது: யோகேஸ்வரன்
Reviewed by Author
on
April 06, 2017
Rating:

No comments:
Post a Comment