அமெரிக்கத் தாக்குதலில் ஆசியாவைச் சேர்ந்த இருவர் பலி!
அமெரிக்கப் படையினர் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்திய தாக்குதலில், இந்தியர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளார்கள் என இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு வெளியிட்டிருக்கும் தகவலின்படி,
ஆப்கானிஸ்தான் – நன்கஹர் மாகாணத்திலுள்ள ஐஎஸ் அமைப்பின் நிலைகள் மீது அணுவற்ற குண்டொன்றை பயன்படுத்தி அமெரிக்கப் படையினர் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இந்த தாக்குதலில் கேரளாவில் இருந்து ஆப்கான் சென்றவர்களில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இவ்விருவரும், கேரளாவில் இருந்து சென்று ஐ.எஸ் அமைப்பினருடன் இணைந்து செயல்பட்டனர் என்றும் இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பில் முழுமையான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு, இந்தியக் குழு ஒன்றை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்கவும் இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு முடிவெடுத்துள்ளதாகவும், அதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும் இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்கத் தாக்குதலில் ஆசியாவைச் சேர்ந்த இருவர் பலி!
Reviewed by Author
on
April 15, 2017
Rating:
Reviewed by Author
on
April 15, 2017
Rating:


No comments:
Post a Comment