அண்மைய செய்திகள்

recent
-

மோசமான செயல்களைச் செய்த இலங்கைப் படையினரை தண்டிக்க வேண்டும்! அமெரிக்கா.


பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்ட இலங்கைப் படையினர் தண்டிக்கப்பட வேண்டும் என ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.

ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய இலங்கைப் படையினர் ஹெய்டியில் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்நிலையில் இது குறித்து ஊடகம் ஒன்றிற்கு கருத்துத் தெரிவித்துள்ள, ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹாலே,

ஹெய்டியில் அமைதி காப்புப் படையினரால் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளான இந்தக் குழந்தைகளுக்கு நாம் எதைச் சொல்ல முடியும்? இந்த அமைதிகாப்பாளர்கள் அவர்களைப் பாதுகாத்தனரா?

ஆகவே, ஐ.நா அமைதி காப்புப் பணிக்கு படையினரை வழங்கியுள்ள எல்லா நாடுகளும், தமது படையினரின் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலுக்கு பொறுப்புக்கூற வேண்டும்.

இதேவேளை, தமது படையினரைப் பொறுப்புக்கூற வைக்க மறுக்கும் நாடுகளின் பங்களிப்பை உடன் நிறுத்த வேண்டும், இவ்வாறான செயல்களில் ஈடுபடும் படையினரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், அவர்களுக்கான நிதி இழப்பீடுகளும் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

ஹெய்டியில் ஐ.நா அமைதிப்படைக்குப் பங்களிப்புச் செய்த நாடுகள், தமது படையினரைப் பொறுப்புக்கூற வைக்க வேண்டும் என்று நாம் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம். மற்ற நாடுகளும் எம்முடன் ஒத்துழைக்க வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஹெய்டியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய இலங்கைப் படையினர் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியிருந்த அசோசியேட்டட் பிரஸ், இந்தக் குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய இலங்கைப் படையினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹாலே வெளியிட்டிருக்கும் இந்தக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகின்றது.

மோசமான செயல்களைச் செய்த இலங்கைப் படையினரை தண்டிக்க வேண்டும்! அமெரிக்கா. Reviewed by Author on April 15, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.