333 திமிங்கலத்தை கொடூரமாக வேட்டையாடிய ஜப்பான்: அதிர வைக்கும் பின்னணி காரணம்...
அண்டார்டிகாவில் 333 திமிங்கலத்தை ஆராய்ச்சி என்ற பெயரில் ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் வேட்டையாடியிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் ஆராய்ச்சி என்று கூறி, அண்டார்டிக்கா கடலில் மிங்கே வகை திமிங்கலத்தை வேட்டையாடி வருகின்றனர்.
ஜப்பானைச் சேர்ந்த மூன்று கப்பல்கள் 83 நாட்கள் பயணத்திற்குப் பிறகு ஷிமோனோசேகி துறைமுகத்திற்கு வந்து சேர்ந்ததுள்ளது. அந்த கப்பலில் சென்றவர்கள் 333 திமிங்கலத்தை வேட்டையாடியுள்ளனர்.
இதற்கு உலகளவில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டும், ஜப்பான் தனது வேட்டையை தொடங்கி வருகிறது.
இதுகுறித்து ஜப்பான் மீன்வளத்துறை கூறுகையில் மிங்கே வகை திமிங்கலத்தின் இனப்பெருக்கம் மற்றும் ஊட்டசத்து சுழற்சி போன்ற ஆராய்ச்சிக்காகத்தான் வேட்டையாடுகிறோம். வேட்டையாடப்பட்ட ஆண், பெண் திமிங்கலங்கள் அனைத்தும் முதிர்ச்சியடைந்தவை. இதனால் அவற்றின் இனப்பெருக்கம் மற்றும் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் நிகழாது என்று கூறப்பட்டுள்ளது.
ஆராய்ச்சி நிகழ்வாக அடுத்த 12 வருடத்தில் 4000 திமிங்கலத்தை வேட்டையாட ஜப்பான் திட்டமிட்டுள்ளது.
திமிங்கல வேட்டையில் ஜப்பான் ஈடுபடக்கூடாது என்று கடந்த 2014 ஆம் ஆண்டு சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த ஒரு வருடம் மட்டும் வேட்டையை நிறுத்திய ஜப்பான், 2015-16-ல் வேட்டையை மீண்டும் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
333 திமிங்கலத்தை கொடூரமாக வேட்டையாடிய ஜப்பான்: அதிர வைக்கும் பின்னணி காரணம்...
Reviewed by Author
on
April 01, 2017
Rating:

No comments:
Post a Comment