வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியர் ஜீ.குணசீலனின் தலையீட்டினால் 3 வருடங்களின் பின் வெள்ளாங்குளம் பிரதேச வைத்தியசாலைக்கு கிடைத்த நோயாளர் காவு வண்டி-(படம்)
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வெள்ளாங்குளம் பிரதேச வைத்தியசாலையில் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக காணப்பட்ட நோயாளர் காவு வண்டி (அம்புலான்ஸ்) பிரச்சினை வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலனின் துரித முயற்சியின் பலனாக தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வெள்ளாங்குளம் பிரதேச வைத்தியசாலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக அம்புலான்ஸ் வண்டி இல்லாத நிலை காணப்பட்டமையினால் அப்பகுதி மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
வெள்ளாங்குளம் பிரதேச வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட நோயாளர் காவு வண்டி பல்வேறு காரணங்கயினால் வேறு வைத்தியசாலைகளில் சோவைகளுக்கு உற்படுத்தப்பட்டு வந்தது.
இதனால் வெள்ளாங்குளம் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் பல்வேறு பாதீப்புக்களை சந்தித்து வருகின்ற வெள்ளாங்குளம் கிராம மக்கள் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலனின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் மீண்டும் வெள்ளாங்குளம் பிரதேச வைத்தியசாலைக்கு நோயாளர் காவுவண்டியை பெற்றுக் கொடுத்துள்ளார்.மேலும் பல மாதங்களாக அம்புலான்ஸ் வண்டி இல்லாத நிலை காணப்பட்ட மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரிய பண்டிவிருச்சான் பிரதேச வைத்தியசாலைக்கு வெள்ளாங்குளம் பிரதேச வைத்தியசாலையில் தற்காலிகமாக பாவீக்கப்பட்ட அம்புலான்ஸ் வண்டி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
-மக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வெள்ளாங்குளம் பிரதேச வைத்தியசாலை மற்றும், மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரிய பண்டிவிருச்சான் பிரதேச வைத்தியசாலை ஆகியற்றிற்கு அத்தியாவசிய தேவையாக காணப்பட்ட நோயாளர் காவுவண்டிகளை(அம்புலான்ஸ்) பெற்றுக் கொடுத்த வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலனுக்கு குறித்த பிரதேச மக்கள் நன்றிகளை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியர் ஜீ.குணசீலனின் தலையீட்டினால் 3 வருடங்களின் பின் வெள்ளாங்குளம் பிரதேச வைத்தியசாலைக்கு கிடைத்த நோயாளர் காவு வண்டி-(படம்)
Reviewed by NEWMANNAR
on
April 12, 2017
Rating:

No comments:
Post a Comment