அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலனினால் பல்வேறு உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு.(படம்)

மன்னாரில் நேற்று செவ்வாய்க்கிழமை வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் மாகாணசபை நிதி ஒதுக்கீட்டினூடாக பல்வேறு உதவித்திட்டங்களை வழங்கி வைத்துள்ளார்.

அதற்கமைவாக மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாலியாறு மாதர்,கிராம அபிவிருத்திச்சங்கம் மற்றும் வெள்ளாங்குளம் கிராம அபிவிருத்திச்சங்கம் ஆகியவற்றிற்கு தலா ஒரு தொகுதி ஒலிபெருக்கித்தொகுதிகளும், நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அளவக்கை பங்கு ஆலயத்திற்கு ஓகன் வாத்தியக்கருவியும்,மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பனங்கட்டிக்கோட்டு கிழக்கு மாதர்,கிராம அபிவிருத்திச்சங்கத்திற்கு ஒலி பெருக்கி தொகுதியும்,தரவன்கோட்டை மாதர்,கிராம அபிவிருத்திச்சங்கத்திற்கு ஒரு தொகுதி சமையல் பாத்திரங்களும் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலனினால் நேற்று செவ்வாய்க்கிழமை வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




மன்னாரில் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலனினால் பல்வேறு உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு.(படம்) Reviewed by NEWMANNAR on April 12, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.