40 ஆண்டு காலமாக படையினரின் கட்டுப்பாட்டில் தமிழர்களின் காணிகள்!
40 ஆண்டு காலமாக வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களின் காணிகளை இராணுவம் அபகரித்து வைத்துள்ளதாக நவசமசமாஜ கட்சியின் அரசில் குழு உறுப்பினர் திருநாவுக்கரசு தெரிவித்தார்.
இந்நிலையில், யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 8 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் வடக்கில் உள்ள அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படாமல் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
2015ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அதிகரித்து கொடுத்துள்ளமையானது வரவேற்கப்பட வேண்டிய விடயம்.
எனினும், இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் பல நிறைவேற்றப்படாமல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக புதிய அரசியல் அமைப்பு தொடர்பான விடயத்தில் இரண்டு பிரதான கட்சிகளும் இழுத்தடிப்பு செய்கின்றன.
இந்நிலையில் புதிய அரசியல் அமைப்பை விரைவாக கொண்டு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்வரும் மே தின கூட்டத்தை நடத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
40 ஆண்டு காலமாக படையினரின் கட்டுப்பாட்டில் தமிழர்களின் காணிகள்!
Reviewed by Author
on
April 25, 2017
Rating:

No comments:
Post a Comment