அண்மைய செய்திகள்

recent
-

தேசியமட்டச் சதுரங்கப் போட்டிக்கு கிளிநொச்சிமாவட்டத்தில் இருந்து 49 மாணவர்கள்.


இலங்கை சதுரங்கச் சம்மேளனத்தின் 2017 ம் ஆண்டுக்கான தேசிய மட்ட இளையோர் சதுரங்கப் போட்டிக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 49 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டச் சதுரங்கச் சங்கத்தின் ஒழுங்குபடுத்தலில் கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தின் ஆதரவுடன் கடந்த 11ம், 12ம் திகதிகளில் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட இளையோர் சதுரங்கப் போட்டிகளில் இவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

இவர்கள் 17ம் திகதி தொடக்கம் 20ம் திகதி வரை கொழும்பு டீ.எஸ். சேனநாயக்கா கல்லூரியில் நடைபெறவுள்ள தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றவுள்ளனர்.

தெரிவுசெய்யப்பட்ட மாணவர் விபரம்

8 வயதின் கீழ் ஆண்கள்.

1ம் இடம்- ச.மதுமிலன் – கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயம்.

2ம் இடம் – சி.தமிழ்குமரன் – கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயம்.

3ம் இடம் ரி.பினோஜன் – கிளிநொச்சி மகா வித்தியாலயம்.

8 வயதின் கீழ் பெண்கள்.

1ம் இடம்- பு.ந்ந்துஷா – கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயம்.

2ம் இடம் – பா.வட்ஷிகா – கிளிநொச்சி மகா வித்தியாலயம்.

3ம் இடம் நி.பம்ஷிகா – சோரன்பற்று சீ.சீ.த.க.பாடசாலை.

4ம் இடம் – கே. லதுர்ஜிகா- மாசார் அ.த.க.பாடசாலை.

5ம் இடம்- எஸ். ஜாதவி – கிளிநொச்சி மகா வித்தியாலயம்.

10 வயதின் கீழ் ஆண்கள்

1ம் இடம்- ஜே.பிறேம்டிலக்‌ஷன் – கிளிநொச்சி மகா வித்தியாலயம்.

2ம் இடம் – சி.மகிழன்பன் – கிளிநொச்சி மகா வித்தியாலயம்.

3ம் இடம் – கி.பானுஜன் – கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயம்.

4ம் இடம்- எஸ். கிருஷாந் – கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயம்.

10 வயதின் கீழ் பெண்கள்.

1ம் இடம்- பு.கலையிசை – கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயம்.

2ம் இடம் – ஜே.யாழவி – கிளிநொச்சி மகா வித்தியாலயம்.

3ம் இடம் பா.துளசிகா – கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயம்.

4ம் இடம்- எம். வைகா- கிளிநொச்சி மகா வித்தியாலயம்.

12 வயதின் கீழ் ஆண்கள்.

1ம் இடம்- கு. சங்கீர்த்தன் – கிளிநொச்சி மகா வித்தியாலயம்.

2ம் இடம் – சி.பிரணவன் – கிளிநொச்சி மகா வித்தியாலயம்.

3ம் இடம் – ரீ. நவீன ன் – கிளிநொச்சி மகா வித்தியாலயம்.

4ம் இடம்- எம். நித்திலன் – கிளிநொச்சி மகா வித்தியாலயம்.

5ம் இடம் – எஸ். நிதுஷன் – கிளிநொச்சி மகா வித்தியாலயம்.

12 வயதின் கீழ் பெண்கள்.

1ம் இடம்- ஜே.கபீஷ்ணா – இராமநாதபுரம் மகா வித்தியாலயம்.

2ம் இடம் – மோ.வானதி – கிளிநொச்சி மகா வித்தியாலயம்.

3ம் இடம் – எம். மருணிதா – கிளிநொச்சி மகா வித்தியாலயம்.

4ம் இடம் – ப.கிசோரிகா – கிளிநொச்சி மகா வித்தியாலயம்.

5ம் இடம்- கே.மயூரதா – கிளிநொச்சி மகா வித்தியாலயம்.

6ம் இடம்- கௌ. பிறையினி – பளை மத்திய கல்லூரி.

14 வயதின் கீழ் ஆண்கள்.

1ம் இடம்- பா.கம்சிகன் – கிளிநொச்சி மகா வித்தியாலயம்.

2ம் இடம் – ஈ.ஜதுர்ஷன் – இராமநாதபுரம் மகா வித்தியாலயம்.

3ம் இடம் – ஆர். பிரதாபன் – கிளிநொச்சி மகா வித்தியாலயம்.

4ம் இடம் – வி.தர்ஷிகன் – கிளிநொச்சி மகா வித்தியாலயம்.

5ம் இடம்- சே. சிவகுமாரன் – வட்டக்கச்சி மத்திய கல்லூரி.

6ம் இடம்- கே.கிசேரன் – பளை மத்திய கல்லூரி.

7ம் இடம் – சி.கவிசாந் – கிளிநொச்சி மகா வித்தியாலயம்.

8ம் இடம் – எம்.நோஜன் – கிளிநொச்சி மகா வித்தியாலயம்.

14 வயதின் கீழ் பெண்கள்.

1ம் இடம்- கௌ. தமிழிசை – பளை மத்திய கல்லூரி.

2ம் இடம்- க.றஜீனா – இராமநாதபுரம் மகா வித்தியாலயம்.

3ம் இடம் – வி.றக்‌ஷிகா – புனித திரேசா பெண்கள் கல்லூரி.

16 வயதின் கீழ்ஆண்கள்.

1ம் இடம்- ஜே.பிரவிந்தன் – கிளிநொச்சி மகா வித்தியாலயம்.

2ம் இடம் – சி.விக்னேஷ் – கிளிநொச்சி மகா வித்தியாலயம்.

3ம் இடம் – எம். குயிலன் – கிளிநொச்சி மகா வித்தியாலயம்.

4ம் இடம் – த.இளங்கோபன் -கிளிநொச்சி மகா வித்தியாலயம்.

5ம் இடம்- உ.ஹரிராம் – திருவையாறு மகா வித்தியாலயம்.

16 வயதின் கீழ் பெண்கள்.

1ம் இடம்- பி.மதுசனா – கிளிநொச்சி மகா வித்தியாலயம்.

2ம் இடம் -கெ.பிரம்மிகா – கிளிநொச்சி மகா வித்தியாலயம்.

3ம் இடம் – எம். புகழினி – கிளிநொச்சி மகா வித்தியாலயம்.

18 வயதின் கீழ் ஆண்கள்.

1ம் இடம்- எஸ். டனுஷியன் – அக்கராயன் மகா வித்தியாலயம்.

2ம் இடம் – சே.மயூரன் – வட்டக்கச்சி மத்திய கல்லூரி.

18 வயதின் கீழ் பெண்கள்.

1ம் இடம் – எஸ். கஜானி – கிளிநொச்சி இந்துக் கல்லூரி.

16 வயதின் கீழ் பெண்கள்.

1ம் இடம்- பி.மதுசனா – கிளிநொச்சி மகா வித்தியாலயம்.

இம் மாணவர்கள் பங்குபற்றவுள்ள தேசிய மட்ட இளையோர் சதுரங்கப்போட்டிகள் சர்வதேச சதுரங்க தரப்படுத்தல் பட்டியலுக்கு (Rating) உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இப்போட்டிகள் கடந்த வருடம் முதல் முறையாக கிளிநொச்சியில் நடைபெற்றதுடன் 53 பேர் தேசிய மட்டப்போட்டிக்குத் தெரிவுசெய்யப்பட்டு அதில் ஒருவர் சர்வதேச சதுரங்கத் தரப்படுத்தல் பட்டியலில் இடம் பிடித்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.


தேசியமட்டச் சதுரங்கப் போட்டிக்கு கிளிநொச்சிமாவட்டத்தில் இருந்து 49 மாணவர்கள். Reviewed by NEWMANNAR on April 17, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.